For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு

மும்பை பென்டி பஜாரில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

மும்பை: மும்பை பென்டி பஜாரில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இந்த கட்டிடம் 6 ஆண்டுகளுக்கு முன்னரே பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்ட இடம் என கூறப்படுகிறது.

மும்பையில் பைகுலா பகுதியில் உள்ள 4 மாடிக் கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. மும்பையை புரட்டிப் போட்ட கனமழையால் இந்த கட்டிடம் இடிந்து விழுந்தது.

தேசிய பேரிடர் மீட்பு குழு

தேசிய பேரிடர் மீட்பு குழு

கட்டிடம் விழுந்த உடனேயே தேசிய பேரிடர் மீட்பு குழு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். மொத்தம் 90 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இப்பணியில் ஈடுபட்டனர்.

மோப்ப நாய்கள்

மோப்ப நாய்கள்

இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன. 10 தீயணைப்பு வாகனங்கள், 2 மீட்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டிருந்தன.

பலி எண்ணிக்கை 15

பலி எண்ணிக்கை 15

இக்கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும் படுகாயமடைந்த சிலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது.

பாதுகாப்பற்ற கட்டிடம்

பாதுகாப்பற்ற கட்டிடம்

ஆகையால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே இந்த கட்டிடம் 6 ஆண்டுகளுக்கு முன்னரே பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட இடம் என்கின்றனர் அதிகாரிகள்.

English summary
Seven people have been killed and 16 injured after a four-storeyed building collapsed in Mumbai’s Byculla area on today morning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X