For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பை மாநகராட்சி தேர்தல்: பாந்த்ராவில் மனைவியுடன் வந்து வாக்களித்த 'கடவுள்'

முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பை பாந்த்ரா பகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம், மும்பை மாநகராட்சித் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் பாந்த்ரா தொகுதியில் வாக்களித்தார்.

மும்பை, தாணே, நாக்பூர், புணே, நாசிக் உள்பட 10 மாநகராட்சிகள், 11 மாவட்ட பஞ்சாயத்துகள், 118 பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

Mumbai civic election: Former Cricketer Tendulkar has casted his vote

மொத்தம் உள்ள 5,512 பதவிகளுக்கு 17,331 பேர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 40,000 வாக்குச்சாவடிகளில் 3.77 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர்.

மும்பை மாநகராட்சியில் மொத்தம் 227 வார்டுகள் உள்ளன. இதற்கு 2,275 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வாக்குப்பதிவுக்காக 7,304 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இன்று காலை முதலே இங்கு விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராஜ்யசபா எம்.பி-யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் வந்து மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தார். பின்னர் மக்கள் அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என சச்சின் கேட்டுக் கொண்டார்.

English summary
Civic polls are going on in Mumbai. Former Cricketer Sachin Tendulkar and his wife Anjali has casted their vote in Bandhra constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X