For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரெய்டுக்கு பயந்து சுவர் இடுக்கில் ஒளிந்திருந்த 14 பெண்கள்... ஷாக்கான மும்பை போலீஸ்

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் மஜ்ஜிவாடா என்ற இடத்தில் நடந்த போலீஸ் ரெய்டின்போது டான்ஸ் நிகழ்ச்சி நடந்த இடத்தின் சுவர் இடுக்குகளில் பெண்கள் மறைந்திருந்ததைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

மொத்தம் 14 பெண்களை சுவர் இடுக்கிலிருந்து போலீஸார் மீட்டுக் கைது செய்துள்ளனர். இரு சுவர்களுக்கு இடையிலான இடுக்கில் இந்த பெண்கள் மறைந்திருந்தது போலீஸாரை அதிர வைத்தது.

என்ன விசேஷம் என்றால் இந்த சுவர் இடுக்கானது கண்களுக்குத் தெரியாத வகையில் ரிமோட் கன்ட்ரோல் மூலம் நவீனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்பதுதான். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் போராடி இந்த சுவர் இடுக்கை போலீஸார் கண்டுபிடித்து பெண்களை வெளியே கொண்டு வந்தனர்.

கைது...

கைது...

இந்த விவகாரம் தொடர்பாக பார் உரிமையாளர்களில் மூன்று பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அதில் ஒருவர் நவி மும்பையைச் சேர்ந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர் ஆவார்.

ரெய்டு...

ரெய்டு...

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் சச்சின் பாட்டீல் கூறுகையில், "ரெய்டு போனபோது மேடையில் நான்கு பெண்களே இருந்தனர். ஆனால் அங்குள்ள மூலையில் உள்ள சுவர் இடுக்கைப் பார்த்து சந்தேகமடைந்து நாங்கள் ஆராய்ந்தபோதுதான் இடுக்குக்கு இடையே பல பெண்கள் இருப்பது தெரிய வந்தது" என்றார்.

ஆபாசப் பாடல்கள்...

ஆபாசப் பாடல்கள்...

இந்த கிளப்பானது பாருடன் கூடியதாகும். இங்கு அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக இசை நிகழ்ச்சிகள் நடைபெறுமாம். மேலும் ஆபாசப் பாடல்களுக்கு நடனம் ஆடுவார்களாம் பெண்கள். அவர்கள் மீது பணக்கார இளைஞர்கள் பணத் தாள்களை வீசி மகிழ்வார்களாம்.

சுவர் இடுக்கு...

சுவர் இடுக்கு...

ஒரு மணி நேர சோதனைக்குப் பின்னர் இந்த பாரிலிருந்து 14 பெண்களை போலீஸார் மீட்டுக் கைது செய்தனர். இவர்கள் மறைந்திருந்த சுவர் இடுக்கானது 3 அடி அகலமும், 10 அடி நீளமும் கொண்டதாகும்.

10 பெண்கள்...

இந்த இடைவெளிக்குள் 10 பெண்கள் மறைந்து நின்றிருந்தனராம். அவர்களை வெளியே வரச் செய்து போலீஸார் கைது செய்தனராம். இதேபோன்ற சுவர் இடுக்குகளை பாத்ரூம்கள், கிச்சன் மற்றும் பிற பகுதிகளிலும் இந்த பார் நிறுவனம் அமைத்துள்ளதாம்.

English summary
A police raid at the Honeycomb bar at Majiwada on Wednesday led to the arrest of 14 girls who squeezed themselves inside a specially-built hi-tech hidden cavity inside the walls, which could be operated only with a remote control device. It took the police close to an hour to locate the cavity, said a cop.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X