For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த பெண்ணுடன் சேர்த்து காரை டோ செய்த டிராபிக் போலீஸ்: வைரல் வீடியோ

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்த பெண்ணோடு சேர்த்து காரை டோ செய்த போக்குவரத்து துறை கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை மலாத் பகுதியில் உள்ள எஸ்.வி. ரோட்டில் சாலையோரம் நின்ற காரில் 20களில் இருக்கும் பெண் ஒருவர் தனது 7 மாதக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த டோ வண்டி அந்த காரை எடுக்க முயன்றுள்ளது. இதை பார்த்த அந்த பெண்ணோ தனக்கு உடல்நலம் சரியில்லை என்றும், குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருப்பதால் காரை டோ செய்ய வேண்டாம் என்றும் போக்குவரத்து துறை கான்ஸ்டபிள் ஷஷாங்க் ரானேவிடம் கெஞ்சியுள்ளார்.

ரானே அந்த பெண்ணின் பேச்சை கேட்காமல் காரை டோ செய்தார். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த நபரும் ரானேவிடம் கெஞ்சியும் பலனில்லை. இச்சம்பவம் குறித்து அறிந்த சிவ சேனா உள்ளிட்ட பல கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து ரானே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான விசாரணை முடிந்த பிறகு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சாலையோரம் நின்ற மற்ற 2 கார்களை ரானே கண்டுகொள்ளவில்லை என்றும், தன் காரை மட்டும் கெஞ்சியும் டோ செய்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.

English summary
Hours after a video showing Mumbai Traffic Police personnel towing away a car with a sick woman sitting in the rear seat and breastfeeding her seven-month-old baby went viral, a policeman was on Saturday suspended, pending an inquiry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X