For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பையில் ரயில் நிலைய நெரிசல் விபத்தில் 22 பேர் பலி - ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

மும்பை ரயில்நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: மும்பையில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மும்பை என்பின்ஸடன் ரயில்நிலையத்தில் நடை மேம்பாலத்தில் ஏராளமானோர் சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Mumbai Elphinstone Road stampede PM condolences

இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பையில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

மும்பையில் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதல்வர் தேவேந்திர பட்நவீஸ் தலா ரூ. 5 லட்சம் வரை நிதி அறிவித்துள்ளார்.

English summary
At least 22 people have died and another 50 injured in a stampede at the foot over bridge at Mumbai’s Elphinstone Road station on Friday. Prime Minister Narendra Modi tweets condolences, promises assistance
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X