For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மும்பையில் பெண் பத்திரிகையாளரின் முடியை இழுத்து இனவெறி தாக்குதல்... ஊபர் பயணிக்கு போலீஸ் வலை

மும்பையில் பெண் பத்திரிகையாளரின் முடியை பிடித்து இழுத்து இனவெறி தாக்குதல் நடத்திய பயணியை போலீஸார் தேடி வருகின்றனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    பெண் பத்திரிகையாளரின் முடியை இழுத்து இனவெறி தாக்குதல்...வீடியோ

    மும்பை: மும்பையில் பெண் பத்திரிகையாளரின் முடியை பிடித்து இழுத்து இனவெறி தாக்குதல் நடத்திய மற்றொரு பெண் பயணியை போலீஸார் தேடி வருகின்றனர்.

    உஷ்நோட்டா பால் என்பவர் மும்பையில் பெண் பத்திரிகையாளர் ஆவார். இவர் ஒரு நிகழ்வுக்கு செல்வதற்காக ஊபர் நிறுவனத்தின் ஷேர் செய்து கொள்ளும் கால் டாக்ஸியில் பயணம் செய்தார். அப்போது அதில் மற்றொரு பெண்ணும் இருந்துள்ளார்.

    அந்த பெண் லோயர் பரேலில் உள்ள ஊர்மி எஸ்டேட்டில் அந்த பெண் இறங்க வேண்டியிருந்தது. ஆனால் அதற்கு முன்னர் சிறிது தூரத்தில் உஷ்நோட்டா பாலை அவதூறாக பேசியுள்ளார். மேலும் அதிக கட்டணம் செலுத்தும் தன்னை கடைசியில் இறக்குவதாக டிரைவரிடம் கூச்சலிட்டுள்ளார்.

    கொத்து முடி

    கொத்து முடி

    உடனே உஷ்நோட்டாவை கண்டபடி பேசியுள்ளார். இதை வீடியோ எடுக்க முயன்றபோது பாலிடம் இருந்த போனை பறித்துக் கொண்டு உடைத்து விடுவதாக மிரட்டியுள்ளார். மிகவும் வெறியுடன் காணப்பட்ட அந்த பெண் இறங்குவதற்கு முன்னர் உஷ்நோட்டாவின் முடியை பிடித்து இழுத்துள்ளார். கொத்தாக முடியை பிடித்து இழுத்து அறுத்துள்ளார்.

    சாட்சி கூற வரவில்லை

    சாட்சி கூற வரவில்லை

    இதனால் பின் சீட்டில் முழுவதும் முடிகள் கொட்டப்பட்டிருந்தன. அப்படியும் வெறி அடங்காமல் உஷ்நோட்டாவின் முகத்தையும் கைகளையும் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து காவல் நிலையத்தில் உஷ்நோட்டா புகார் அளித்தார். ஆனால் ஊபர் நிறுவனமோ நடந்தவற்றை சாட்சியாக கூற மறுத்துவிட்டது.

    பதில்

    இதுதொடர்பாக உஷ்நோட்டா பால் தொடர் டுவீட்கள் மூலம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதை பார்த்த சிலர் தாக்குதல் நடத்தியவர் ஆணாக இருந்திருந்தால் ஊபர் நிறுவனம் புகார் அளித்திருக்கும். பெண் என்பதால் தயங்குகிறது என்று சிலர் பதில் அளித்துள்ளார்.

    ஆதரவு

    ஆதரவு

    இந்த தொடர் டுவீட்டுகளையும் மற்றவர்களின் விமர்சனங்களையும் பார்த்த ஊபர் நிறுவனம் உஷ்நோட்டா பாலுக்கு பதில் அளித்துள்ளது. அதில் இந்த கால் டாக்ஸியில் நடந்த சம்பவம் வருத்தமடைய செய்துள்ளது. இது முழு அத்துமீறல். இந்த வழக்கு விசாரணைக்கு தாங்கள் ஆதரவு தருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.

    English summary
    A journalist from Mumbai was attacked by a co passenger in a Uber cab. The co passenger pulled the journo's hair.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X