For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

58 அடி உயர நீரவ் மோடி கொடும்பாவியை எரித்து மும்பையில் ஹோலி கொண்டாட்டம்

மும்பையில் நீரவ் மோடியின் கொடும்பாவியை எரித்து மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கொடும்பாவியை எரித்து மும்பையில் ஹோலி கொண்டாட்டம்- வீடியோ

    மும்பை: நீரவ் மோடியின் கொடும்பாவியை எரித்து மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.

    வைர வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் கடன் பெற்றார். ஆனால் அதனை திருப்பி செலுத்தாமல் நீரிவ் மோடி வெளிநாட்டுக்கு தப்பி சென்றார்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

    விவசாயிகள் தற்கொலை

    விவசாயிகள் தற்கொலை

    பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றிய நீரவ் மோடி வெளிநாட்டில் சொகுசாக வாழ, 50 ஆயிரம் ரூபாய் கடன் பெறும் விவசாயிகள் எல்லாம் வங்கிகளின் நெருக்கடியால் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

    மக்கள் கோபம்

    மக்கள் கோபம்

    நீரவ் மோடி பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததோடு வெளிநாட்டில் குடும்பத்துடன் தலைமறைவாகி வாழ்ந்து வருகிறார். இதனால் மக்கள் அவர் மீது கோபம் கொண்டுள்ளனர்.

    கொடும்பாவி எரிப்பு

    கொடும்பாவி எரிப்பு

    இந்நிலையில் ஹோலிகா அரக்கியை எரித்துக்கொன்றதை நினைவு கூறும் வகையில் ஹோலி பண்டிகைக்கு முதல் நாள் தீயவைகளை எரிப்பது வழக்கம். அதன்படி நாட்டிற்கு பேரிழப்பை ஏற்படுத்திய நீரவ் மோடியின் கொடும்பாவியை எரித்து மும்பை மக்கள் ஹோலியை கொண்டாடினர்.

    58 அடி உயர கொடும்பாவி

    58 அடி உயர கொடும்பாவி

    இதற்காக 58 அடி உயரத்தில் நீரவ் மோடியின் கொடும்பாவி தயாரிக்கப்பட்டு மும்பை வெர்லி பகுதியில் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டது. அரக்கி ஹோலிகாவுடன் நீரவ் மோடியை ஒப்பிட்டு மும்பை மக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

    English summary
    Mumbai peoples burnt Nirav Modi's effigy on Holi festival. Holi festival is celebrating in across the country.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X