For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்பி மோகத்தால் விபரீதம்... கிரிக்கெட் விளையாட சென்று பிணமாகத் திரும்பிய சிறுவன்

Google Oneindia Tamil News

மும்பை: செல்ஃபி எடுப்பதற்காக ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கூட்ஸ் வண்டியின் மீது ஏறிய சிறுவன் மிசாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மும்பையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செல்பி மோகத்தால் விசித்திரமான இடங்களில் விபரீதமாக செல்ஃபி எடுத்து உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

Mumbai School Boy deis while taking selfie from atop of the train

மும்பையில் உள்ள கஞ்ஜூர்மர்க் பகுதியைச் சேர்ந்த சிறுவன் சகில் (14). இவன் அந்த பகுதியில் உள்ள புனித சேவியர் உயர் நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம், தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடுவதற்காக நாகூர் ரெயில் நிலையத்திற்கு சென்றான். அப்போது அவனுக்கு, ஸ்டேஷனில் நின்றிருந்த கூட்ஸ் ரெயிலின் கூரை மீது ஏறி செல்ஃபி எடுக்க ஆசை வந்தது.

அதையடுத்து, கூட்ஸ் வண்டியின் மேலே ஏறிய சாக்கில் கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக பதட்டத்தில் உயரத்தில் இருந்த 25 ஆயிரம் வோல்ட் மின்சாரம் பாயும் உயரழுத்த மின்கம்பியைத் தொட்டவுடன் தூக்கி வீசப்பட்டான்.

இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் அவரை விட்டு ஓடிவிட்டனர். சுய நினைவிழப்பதற்கு முன்பாக, சம்பவத்தைப் பார்த்து விரைந்து வந்த போலீசாரிடம் சகில் தன் தாயின் செல்போன் எண்ணை கொடுத்தான். உடனடியாக அருகிலுள்ள ராஜவாடி மருத்துவமனையில் உடலில் 80 சதவீதம் தீக்காயங்களுடன் சிறுவன் அனுமதிக்கப்பட்டன்.

பின்னர்,சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தான். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவனது அப்பா அந்த போனை கிஃப்டாக கொடுத்திருக்கிறார்.

இதேபோல், மும்பை ஜோகேஷ்வரி ரெயில் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் 16 வயதான கணேஷ் என்ற மாணவன் உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.

English summary
Mumbai School Boy went to play cricket, while he ws taking selfie from atop of the train suddenly electrocuted and died
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X