For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மறக்க முடியுமா?.. இன்றோடு 7 வருடம்.. மும்பையை கதி கலங்க வைத்த 2011 தொடர் குண்டு வெடிப்பு!

மும்பையில் ஜூலை 13ம் தேதி 2011ல் தொடர்ச்சியாக மூன்று இடங்களில் குண்டுவெடித்த மோசமான சம்பவம் நடந்து இன்றோடு 7 வருடம் முடிந்துள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் ஜூலை 13ம் தேதி 2011ல் தொடர்ச்சியாக மூன்று இடங்களில் குண்டுவெடித்த மோசமான சம்பவம் நடந்து இன்றோடு 7 வருடம் முடிந்துள்ளது.

மும்பையில் ஜூலை 11, 2006ல் நடந்த மோசமான அந்த நிகழ்வை யாராலும் மறக்க முடியாது. மொத்தம் 180 பேரை பலிகொடுத்து, 800க்கும் அதிகமானோர் காயமடைந்து இந்தியாவே ஆடிப்போனது. சரியாக 12வருடம் முடிந்தும் அந்த பாதிப்பு இன்னும் இந்தியாவில் இருக்கிறது.

அதன்பின் மும்பையில் 26ம் தேதி ஜூலை 2008ல் தாக்குதல் நடந்தது. மீண்டும் ஜூலை 13ம் தேதி 2011ல் தொடர்ச்சியாக மூன்று இடங்களில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்து இன்றோடு 7 வருடம் ஆகிறது.

எப்போது என்ன நடந்தது

எப்போது என்ன நடந்தது

ஜூலை 11, 2006ல் மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மும்பையில் மஹிம் ரயில் நிலையத்தில் சரியாக காலை 6.23 மணிக்கு குண்டு வெடித்தது. பாந்த்ரா ரயில் நிலையத்தில் 6.23 மணிக்கு குண்டு வெடித்தது. மீரா ரோட் ரயில்நிலையத்தில் 6.23 மணிக்கு குண்டு வெடித்தது. மதுங்கா மற்றும் ஜோகேஸ்வரி ரயில் நிலையத்தில் 6.24 மணிக்கு குண்டு வெடித்தது. கார் சப் வே ரயில்நிலையத்தில் 6.25 மணிக்கு குண்டு வெடித்தது. போரிவாலி ரயில்நிலையத்தில் 6.28 மணிக்கு குண்டு வெடித்தது.

 7 வருடம் ஓடிவிட்டது

7 வருடம் ஓடிவிட்டது

அதேபோல் தொடர் குண்டு வெடிப்பு 3 இடங்களில் ஜூலை 13ம் தேதி 2011ல் தொடர்ச்சியாக மூன்று இடங்களில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்து இன்றோடு 7 வருடம் ஆகிறது. ஆனால் 2006 குண்டுவெடிப்பை விட இது பலம் வாய்ந்தது. அதேபோல் அப்போது வெறும் டிபன் பாக்ஸ் குண்டுகள் பயன்படுத்தப்பட்டது இப்போது அதை விட பலமான குண்டுகள் பயன்படுத்தப்பட்டது.

எங்கு நடந்தது

எங்கு நடந்தது

முதல் குண்டு தெற்கு மும்பையின் சவேரி சந்தையில் சரியாக மாலை 6.54 மணிக்கு வெடித்தது. இரண்டாவது குண்டு, ஒபேரா ஹவுஸ் எனப்படும் இன்னொரு வணிக தளத்தில் வெடித்தது. இந்த குண்டு வெடித்தது 6.55 மணிக்கு. அதன்பின் தாதர் ஏரியா பகுதியில் நடந்தது. இது மாலை 7.06 மணிக்கு வெடித்தது. 2006 சம்பவம் போலவே 2, 3 நிமிட இடைவெளியில் இந்த சம்பவம் நடந்தது.

பலி எண்ணிக்கை

பலி எண்ணிக்கை

இதனால் 300 கோடிக்கு அதிகமாக இழப்பு நேர்ந்தது. அதேபோல் 26 பேர் மரணம் அடைந்தார்கள். 150 பேருக்கும் அதிகமாக காயமடைந்து உடல் உறுப்புகளை இழந்தனர். இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், மோசமாக காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டது. இதை இந்தியன் முஜாகிதீன் அமைப்பு நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

English summary
Mumbai stands on its own leg after 7 years of 2011 serial blast.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X