For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மும்பை குண்டுவெடிப்பு தீர்ப்பெழுதிய நீதிபதி டி.ஷிண்டே - இன்று மாலை ஓய்வு பெறுகிறார்!

Google Oneindia Tamil News

மும்பை: மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கிற்கான குற்றவாளிகளுக்கு தீர்ப்பளித்த நீதிபதி இன்றுடன் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

2006 ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு மும்பையின் புறநகர் ரயில்களில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 188 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிமி பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

பலராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை நீதிபதி ஷிண்டே இன்று மதியம் 12.09 மணிக்கு அறிவித்தார்.

இந்த தண்டனை விவரங்களை அறிவித்த மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி யதின் டி. ஷிண்டே இன்றுடன் ஓய்வு பெறுகிறார். ஓய்வு பெறும் கடைசி நாளில் மிக முக்கியமான தீர்ப்பை அவர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Mumbai train blast judgment justice T.Shindey retied in this finest and fires judgement evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X