For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ம.பியில் ஆற்றில் விழுந்த ரயில்கள்.. 27 பேர் பலி.. 300 பேர் உயிருடன் மீட்பு

Google Oneindia Tamil News

போபால்: மும்பையிலிருந்து வாரணாசி சென்ற காமயானி எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் மத்திய பிரதேச மாநிலத்தில் ஹர்தா என்ற இடத்தில் இன்று அதிகாலை தடம் புரண்ட விபத்தில் குறைந்தது 27 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ன. ரயில் பெட்டிகளில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் பணி முடுக்க விடப்பட்டுள்ளது. இதுவரை 300 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

மசாக் என்ற ஆற்றில் இந்த விபத்து நடந்தது. விபத்து நிகழ்ந்த சற்று நேரத்தில் ஜபல்பூரிலிருந்து மும்பை வந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயில் 10 பெட்டிகளும் அதே இடத்தில் தடம் புரண்டன.

மும்பையிலிருந்து வாரணாசிக்கு காமயானி ரயில் நேற்று இரவு வழக்கம் போல் புறப்பட்டுச் சென்றது. அந்த ரயில் மத்தியபிரதேச மாநிலம் ஹர்தா என்ற பகுதியிலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மசாக் ஆற்றின் மீதிருந்த பாலத்தை கடந்த போது அதன் 5 பெட்டிகள் தடம்புரண்டன. இதனால் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறினர்.

தடம் புரண்ட வேகத்தில் ரயிலின் 5 பெட்டிகள் மசாக் ஆற்றில் கவிழ்ந்தது. தகவல் அறிந்த ஹர்தா மாவட்ட நிர்வாகம் மீட்புப் பணிகளில் இறங்கியுள்ளது. சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விபத்தையடுத்து மீட்புப் படையினர் விரைந்து, மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர். இந்த பதற்றம் அடங்குவதற்குள் காமயானி ரயில் தடம் புரண்ட இடம் அருகே ஜபல்பூரிலிருந்து மும்பை நோக்கி வந்துகொண்டிருந்த ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகளும் தடம் புரண்டன. இரு ரயில்கள் பெட்டிகள் தடம் புரண்டதையடுத்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

விபத்து நிகழ்ந்த இடத்திற்கு 5 பெட்டிகள் கொண்ட ரயிலில் மூலம் மீட்புக் குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அதில் 25 மருத்துவர்கள் கொண்ட சிறப்பு குழு, போலீசார், மற்றும் மீட்புப் படையினர் சென்றுள்ளனர். கடும் இருள் மற்றும், கன மழை, வெள்ளத்தால் மீட்புப் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். 300 பேர் வரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 300 பேருக்கும் மேல் ரயில் பெட்டிகளில் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக மேற்கு மத்திய ரயில்வே செய்தித் தொடர்பாளர் பியூஷ் மாத்தூர் தெரிவித்துள்ளார்.

ஹெல்ப்லைன் எண்கள்:

விபத்தில் சிக்கியோர் குறித்த விவரம் அறிய ஹெல்ப்லைன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மும்பை (022) - 25280005
பிரிங்கி (016) - 48426
போபால் (0755) - 4001609
ஹர்தா (+91) - 9752460088
பினா (07580) - 222580
இடார்சி (07572) - 241920

English summary
Kamayani Express Derails in Madhya Pradesh, 5 Bogies Fall in River: Reports A passenger train, Kamyani Express, has derailed in Madhya Pradesh, according to reports. Five bogies of the train have reportedly fallen into the Machak river. Another passenger train Janata Express from Jabalpur to Mumbai also derails on the same spot
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X