For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இடுக்கி நிலச்சரிவு.. 8வது நாளாக மீட்பு பணி.. 55ஐ தொட்ட பலி எண்ணிக்கை.. மேலும் ஒரு உடல் மீட்பு

Google Oneindia Tamil News

இடுக்கி: கேரளா மாநிலம் மூணாறு நிலச்சரிவு விபத்தில் பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    Munnar Landslide: சிக்கிய தமிழ் தேயிலை ஊழியர்கள்

    கேரளாவில் இடுக்கி மாவட்டம் மூணாறில் நிலச்சரிவு காரணமாக தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. அங்கு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது.

    அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு வாரத்திற்கும் மேல் ஆகியும் கூட இன்னும் முழுதாக மீட்பு பணிகள் நிறைவு பெறவில்லை. 8 நாட்களாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    மூணாறு நிலச்சரிவு- நேரில் பார்வையிட்ட பினராயி விஜயன் -நீதி கோரி தனி மனுஷியாக போராட்டம் நடத்திய கோமதிமூணாறு நிலச்சரிவு- நேரில் பார்வையிட்ட பினராயி விஜயன் -நீதி கோரி தனி மனுஷியாக போராட்டம் நடத்திய கோமதி

    கடும் மழை

    கடும் மழை

    கடும் மழை காரணமாக அங்கு மீட்பு பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மிக ஆழமான இடத்தில் உடல்கள் புதைந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வேகமாக வீடுகள் மீது மண் விழுந்த காரணத்தால், மொத்தமாக கட்டிடங்கள் உள்ளே புதைந்து இருக்கிறது. இந்த சேறு மற்றும் கட்டுமானங்களை அகற்றிவிட்டு உடல்களை மீட்பது மிகவும் சவாலான காரியமாக மாறியுள்ளது.

    மீட்பு பணிகள்

    மீட்பு பணிகள்

    இந்த மீட்பு பணியில் நேற்று இரவு மேலும் ஒரு உடல் மீட்கப்பட்டது. இந்த நிலையில் கேரளா மாநிலம் மூணாறு நிலச்சரிவு விபத்து காரணமாக பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 14 உடல்கள் நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை வேகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கேரளா முதல்வர்

    கேரளா முதல்வர்

    கேரளா முதல்வர் பினராயி விஜயன் நேற்று சம்பவ இடத்தில் சென்று நேரில் பார்வையிட்டார். இந்த நிலச்சரிவு காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடு கட்டித்தாரப்படும் என்று அவர் உறுதி அளித்தார். இந்த நிலச்சரிவு மற்றும் மீட்பு பணிகள் தொடர்பாக 10 நாட்களில் ரிப்போர்ட் கொடுக்க வேண்டும் என்று பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார் .

    எங்கு நடந்தது

    எங்கு நடந்தது

    இந்த நிலச்சரிவில் பலியானவர்களில் 45 பேர் வரை தமிழர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.தினமும் அங்கு உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மழை காரணமாக மீட்பு பணிகள் செய்வதும் கடினமாக இருக்கிறது. அங்கு இருக்கும் ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட் பகுதியில்தான் இந்த நிலச்சரிவு ஏற்பட்டு மொத்தமாக வழியில் இருந்த வீடுகளை மண் மூடியது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Munnar Landslide: Death toll rises to 55 in Kerala as one more body found in the night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X