For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மண் மட்டுமல்ல.. பாறைகள், மரங்களும் சேர்ந்து விழுந்தது.. மூணாரை உலுக்கிய நிலச்சரிவு.. வீடியோ!

Google Oneindia Tamil News

கேரளா: கேரளாவில் இருக்கும் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது .

Recommended Video

    மூணாரை உலுக்கிய நிலச்சரிவு.. வீடியோ

    கேரளாவில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் வயநாடு, இடுக்கி, கண்ணூர், தலைசேரி ஆகிய பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்து வருகிறது.

    இரண்டு நாட்களுக்கு முன் வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வடக்கு ஒடிசா-மேற்குவங்கம் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது.

    மூணாறு நிலச்சரிவு: தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 14 பலி - 12 பேர் மீட்பு - 80 பேர் கதி என்ன? மூணாறு நிலச்சரிவு: தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 14 பலி - 12 பேர் மீட்பு - 80 பேர் கதி என்ன?

    ஏன் மழை

    ஏன் மழை

    தற்போது இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளாவில் வயநாடு, இடுக்கி, மலப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு தற்போதும் விடாமல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ராஜமாலா பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.

    வெள்ளம்

    வெள்ளம்

    மலை பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதால் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டு மொத்தமாக வழியில் இருந்த வீடுகளை மண் மூடியது. மொத்தம் 20 வீடுகள் வழியில் இருந்தது. இந்த வீடுகள் எல்லாம் மொத்தமாக மணல் மூடியது. இதில் 70 பேர் வரை மணலுக்கு உள்ளே சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    பெரிய சந்தேகம்

    பெரிய சந்தேகம்

    இதில் இதுவரை 13 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். 15 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் எத்தனை பேர் உள்ளே இருக்கிறார்கள், அவர்களின் நிலை என்ன என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை. மிகவும் மோசமான காலநிலை நிலவி வருவதால் அங்கு மக்களை மீட்கும் பணிகள் மிக மிக கடுமையாகி உள்ளது.

    வீடியோ வெளியானது

    தற்போது இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி உள்ளது. நிலச்சரிவால் வீடுகள் உடைந்து, மணல் மூடி இருக்கும் கோரமான காட்சிகள் வெளியாகி உள்ளது.

    மணல் மட்டுமல்ல

    வெறும் மணல் மட்டுமின்றி மணலோடு சேர்த்து பெரிய பெரிய மரங்களும் வீடுகள் மேல் விழுந்துள்ளது. அதேபோல் பெரிய பெரிய பாறைகளும் வீடுகள் மேல் விழுந்து இருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது .

    என்ன காலநிலை

    அதே சமயம் இந்த மோசமான காலநிலைக்கு இடையே வீடுகளும் மீட்பு பணிகளும் தீவிரமாக நடந்துள்ளது. மீட்பு படைகள் கூட செல்ல முடியாத இடத்திற்கு சென்று மக்கள் தீவிரமாக மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள்.

    English summary
    Munnar Landslide: Horrific images and videos released from the people of Kerala in social media.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X