For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2018.. 2019.. இப்போது 2020.. மூணார் நிலச்சரிவில் சிக்கிய தமிழ் தேயிலை ஊழியர்கள்.. மீண்டும் கொடூரம்!

Google Oneindia Tamil News

கேரளா: கேரளாவில் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழர்கள் பலர் சிக்கி தவித்து வருகிறார்கள்.

Recommended Video

    Munnar Landslide: சிக்கிய தமிழ் தேயிலை ஊழியர்கள்

    கேரளாவில் இருக்கும் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 15 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜமலை பெட்டிமுடி கன்ணண் தேவன் டீ எஸ்டேட்டில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டு மொத்தமாக வழியில் இருந்த வீடுகளை மண் மூடியது.

    மொத்தம் 20 வீடுகள் வழியில் இருந்தது. இந்த வீடுகள் எல்லாம் மொத்தமாக மணல் மூடியது. இதில் 70 பேர் வரை மணலுக்கு உள்ளே சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    மண் மட்டுமல்ல.. பாறைகள், மரங்களும் சேர்ந்து விழுந்தது.. மூணாரை உலுக்கிய நிலச்சரிவு.. வீடியோ!மண் மட்டுமல்ல.. பாறைகள், மரங்களும் சேர்ந்து விழுந்தது.. மூணாரை உலுக்கிய நிலச்சரிவு.. வீடியோ!

    தமிழர்கள் எப்படி

    தமிழர்கள் எப்படி

    இந்த நிலச்சரிவில் தமிழர்கள் பலர் சிக்கி தவித்து வருகிறார்கள். அந்தப்பகுதியில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் பலர் தேயிலை தோட்ட தொழிலாளர்களாக இருக்கிறார்கள். அங்கேயே சிறிய சிறிய வீடுகளை கட்டி வசித்து வருகிறார்கள். மலை முகடுகளில் இவர்கள் வீடுகளை கட்டி உள்ளனர்.

    மோசமான நிலை

    மோசமான நிலை

    இந்த நிலையில் தற்போது ஏற்பட்டு இருக்கும் நிலச்சரிவில் இவர்கள் சிக்கி தவித்து வருகிறார்கள். இதுவரை அங்கு 7-9 தமிழர்கள் வரை பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இன்னும் பல தமிழர்கள் இங்கே சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.கேரளாவில் எப்போது வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டாலும் அதில் முதல் பாதிப்பு அடைவது அங்கு பணி செய்யும் தமிழர்கள்தான்.

    இடுக்கி

    இடுக்கி

    அதிலும் இடுக்கி,மூணாறு,வயத்தில் இருக்கும் தமிழர்கள்தான் மிக மோசமாக எப்போதும் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த 2018 கேரளா வெள்ளம், அதன்பின் ஏற்பட்ட 2019 நிலச்சரிவு இரண்டிலும் கூட தமிழர்கள் பலர் இப்படி பலியானார்கள்.இந்த நிலையில் தற்போது மீண்டும் அதே போல் ஒரு கொடூரம் அங்கு நடந்து இருக்கிறது.

    தமிழர்கள் எப்போதும்

    தமிழர்கள் எப்போதும்

    கடந்த 2019 நிலச்சரிவில் பல தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். மீண்டும் அதேபோல் ஒரு கொடூரம் தற்போது நடந்துள்ளது. பொதுவாக அங்கு தேயிலை தோட்ட பணிகளை செய்யும் தமிழர்கள் மிக குறைவான சம்பளம் பெறும், பெரிய பணி பாதுகாப்பு இல்லாத ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏழைகளான இவர்கள்தான் மிக மோசமாக எப்போதும் பாதிக்கப்படுகிறார்கள்.

    English summary
    Munnar Landslide: Low paid Tamilian workers got struck in the landslide in Kerala.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X