For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவில் கடும் மழை... வெள்ளத்திற்கு இடையே நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் ரேகா நம்பியார்

மூணாறு நிலச்சரிவில் சிக்கியவர்கள் மீட்க தேசிய பேரிடர் மீட்புப்படையினரை தலைமை ஏற்று வழிநடத்திக் கொண்டிருப்பவர் ரேகா நம்பியார். இவர் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் நான்காவது பட்டாலியனைச் சேர்ந்த மூத்த

Google Oneindia Tamil News

மூணாறு: சீக்கிரம் சீக்கிரம் அங்கே யாரோ இருக்காங்க பாருங்க... தோண்டுங்க... மெதுவா உடலை எடுங்க கொட்டும் மழை, கடும் வெள்ளத்திற்கு இடையேயும் மீட்புப்படையினரை துரிதப்படுத்தி வருகிறார் காமாண்டிங் ஆபிசர் ரேகா நம்பியார். இவர் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் நான்காவது பட்டாலியனைச் சேர்ந்த மூத்த கமாண்டண்ட் என்பதோடு தேசிய பேரிடர் மீட்புப்படையின் முதல் பெண் கமாண்டிங் அதிகாரி. 2015ஆம் ஆண்டு சென்னை பெரு வெள்ளம் மீட்புப்பணி முதல் மூனாறு பெட்டிமுடி மீட்புபணி வரை இவரது பணி அனைவராலும் பாராட்டப்படுகிறது.

கேரளாவில் கனமழை கொட்டி வருகிறது. கடந்த வாரம் வியாழக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தினால் மூணாறில் உள்ள பெட்டிமுடி எஸ்டேட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரியில் 80க்கும் மேற்பட்டோர் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை முதலே மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.

இந்த மீட்புப் பணியில் 55 பேர் கொண்ட தேசியப் பேரிடர் மீட்புப் படையினர்(NDRF) ஈடுபட்டு வருகின்றனர். கனமழை, பலத்த காற்று, கடுங்குளிர் ஆகியவற்றிற்கு இடையில் 11 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மூணாறு நிலச்சரிவு: வளர்த்தவர்களை தேடி அழும் செல்லப்பிராணிகள் - சிறுமியை மீட்க உதவிய நாய் மூணாறு நிலச்சரிவு: வளர்த்தவர்களை தேடி அழும் செல்லப்பிராணிகள் - சிறுமியை மீட்க உதவிய நாய்

தேசிய பேரிடர் மீட்புப்படை

தேசிய பேரிடர் மீட்புப்படை

மூணாறு நிலச்சரிவில் சிக்கியவர்கள் மீட்க தேசிய பேரிடர் மீட்புப்படையினரை தலைமை ஏற்று வழிநடத்திக் கொண்டிருப்பவர் ரேகா நம்பியார். இவர் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் நான்காவது பட்டாலியனைச் சேர்ந்த மூத்த கமாண்டண்ட் என்பதோடு தேசிய பேரிடர் மீட்புப்படையின் முதல் பெண் கமாண்டிங் அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரேகா நம்பியார் தலைமையில் மீட்புப்பணி

ரேகா நம்பியார் தலைமையில் மீட்புப்பணி

கேரள மாநிலம் வடக்கரா பகுதியைச் சேர்ந்தவர். ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். சி.ஐ.எஸ்.எஃப்-பில் தனது முதல் பணியைத் தொடங்கினார். கடந்த 2015ஆம் ஆண்டு வரை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக சி.ஐ.எஸ்.எஃப் யூனிட்டில் இருந்தார். அதன்பிறகு NDRFல் பணியில் அமர்த்தப்பட்டார்.

பெருமை சேர்த்த பெண் அதிகாரி

பெருமை சேர்த்த பெண் அதிகாரி

சென்னையை அடுத்த அரக்கோணத்தில் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் 4வது பட்டாலியனில் மூத்த அதிகாரியாக இருக்கிறார். இதன்மூலம் பட்டாலியனை முழுமையாக செயல்படுத்தக் கூடிய NDRFன் முதல் பெண் அதிகாரி என்ற பெருமையை ரேகா நம்பியார் பெற்றுள்ளார்.

சென்னை வெள்ளமும் கேரளா வெள்ளமும்

சென்னை வெள்ளமும் கேரளா வெள்ளமும்

சென்னை பெரு வெள்ளத்தின் போதும், 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கேரள பெரு வெள்ளத்தின் போதும் தேசிய பேரிடர் மீட்புப் படைக்கு தலைமையேற்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

58 உடல்கள் மீட்பு

58 உடல்கள் மீட்பு

கடந்த வெள்ளி முதல் தேசியப் பேரிடர் மீட்புப் படையின் இரண்டு குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதுவரை 58 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 12 பேரை இன்னும் காணவில்லை. அருகில் ஆறு ஒன்று இருப்பதால் பலரின் உடல்கள் அதில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

சவாலான பணியாக உள்ளது

சவாலான பணியாக உள்ளது

மீட்புபணிகள் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரேகா நம்பியார், ஆற்றின் கரையோரப் பகுதிகளிலும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடுமையான பனிமூட்டம் நிலவுவதால் 20 முதல் 30 அடி வரை மட்டுமே தெளிவாகக் காண முடிகிறது. இப்பகுதி முழுவதும் மிகப்பெரிய பாறைகள் இருக்கின்றன. எனவே தேடுதல் வேட்டையைத் தொடர இந்தப் பாறைகளை அகற்ற வேண்டியிருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் மீட்புப் பணிகள் மேலும் சவாலாக இருக்கின்றது. இதன் காரணமாக மிகவும் ஆழமாக தோண்டி உடல்களைத் தேட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

English summary
Since august 8th the National Disaster Response Force (NDRF) has been carrying out the search and rescue operation in Pettimudi,Munnar, Iduki district.Leading the 55member NDRF team's operation in the hostile environment is a lady officer - Rekha Nambiar, Senior Commandant, Fourth Battalion of the NDRF.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X