For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கவுரவக் கொலை செய்யப்படும் முன்பு வீடியோ வெளியிட்ட இஸ்லாமிய பெண்: வீடியோ இதோ

By Siva
Google Oneindia Tamil News

லக்னோ: உத்தர பிரதேசத்தை சேர்ந்த இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் கவுரவக் கொலை செய்யும் முன்பு வீடியோ எடுத்தது இணையதளங்களில் வைராகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் கிராமத்தை சேர்ந்தவர் சோனி(26). இஸ்லாமிய பெண்ணான அவர் தனது குடும்பத்தாருடன் மும்பையில் வசித்து வந்தார். இந்நிலையில் அவரது குடும்பத்தார் அவரை ரயிலில் ஹத்ராஸுக்கு திடீர் என்று அழைத்துச் சென்றனர்.

ரயில் கழிவறையில் சோனி தனது செல்போனில் தன்னை வீடியோ எடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, என் தந்தை, சகோதரர் என்னை கொலை செய்ய விரும்புகிறார்கள். அதனால் தான் என்னை கிராமத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள். என் உயிருக்கு ஆபத்து உள்ளது.

எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு இவர்கள் தான் காரணம். எனக்கு இம்ரானை திருமணம் செய்ய விருப்பம் என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோவை யார் இணையதளத்தில் வெளியிட்டது என்று தெரியவில்லை. ஊருக்கு சென்ற சோனி கடந்த வெள்ளிக்கிழமை காலை இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்து உடலையும் அடக்கம் செய்துவிட்டனர்.

இந்நிலையில் வீடியோ வைரலாகி போலீசார் ஹத்ராஸுக்கு சென்று சோனியின் உடலை தோண்டி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சோனியின் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சோனியின் குடும்பத்தார் தலைமறைவாகிவிட்டனர்.

English summary
Video of a yong muslim girl has gone viral on internet. The video was taken before she was reportedly killed to protect the honour of the family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X