For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பழங்குடியின பெண்ணை மதம் மாறி காதலித்த முஸ்லீம் இளைஞன் - கட்டையால் அடித்துக்கொலை

குஜராத்தில் பழங்குடியின பெண்ணை காதலித்த 17 வயது முஸ்லீம் இளைஞன் ஒருவர் அடித்து கொல்லபட்டார். இந்த கொலை தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்து நான்கு பேரை போலீசார் சனிக்கிழமையன்று கைது செய்தனர். மேலும் இந்த க

Google Oneindia Tamil News

அகமதாபாத் : குஜராத்தில் 17 வயதான முஸ்லீம் இளைஞனை ஈவு இரக்கமின்றி கட்டையால் கொடூரமாக அடித்துக்கொலை செய்துள்ளனர். பழங்குடியின பெண்ணை காதலித்ததுதான் அந்த இளைஞன் செய்த குற்றமாக பேசப்படுகிறது. கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், நால்வரை கைது செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட அந்த இளைஞரின் பெயர் பெய்ஸ் என்பதாகும். முகமது சுல்தான் அப்துல் ரஹீம் என்பவரின் மகனாவார். அவர்

Muslim youth beaten to death for loving Gujarat tribal woman

போரித்ரா கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண்ணை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு பெற்றோர்களும் கிராமத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

கடந்த வியாழக்கிழமையன்று ஜகாடியா கிராமத்திற்கு வந்த பெய்ஸை ஒரு கும்பல் கட்டையாலும் குழாய்களாலும் கடுமையாக தாக்கியதில் ரத்தம் சொட்டச் சொட்ட கீழே சாய்த்தனர். அந்த நேரத்தில் அந்த இளைஞனின் அம்மா போன் செய்யவே தான் கடுமையாக தாக்கப்பட்டு ஜகாடியா கிராமத்தில் அடிபட்டு கீழே விழுந்திருப்பதாக கூறிவிட்டு மயங்கிவிட்டார்.

தகவல் அறிந்து பெய்ஸ்சின் அப்பா அலறியடித்துக்கொண்டு அங்கு சென்றார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மகனை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவனது உடம்பு முழுவதும் சேதமடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

அவனை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கை விரித்து விடவே சூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றேன். அவனது கல்லீரல், விலா எலும்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினர். சிகிச்சை அளித்தும் என் மகனை காப்பாற்ற முடியவில்லை கண் விழிக்காமலேயே வேதனையோடு உயிரிழந்து விட்டான். என் மகனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

என் மகன் தவறாக ஒன்றும் செய்து விடவில்லை. அவன் காதலித்தது தவறா? என் மகனை அடித்தவர்கள் எத்தனை பேர் என்று தெரியாது ஆனால் அடித்த அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று கண்ணீருடன் கூறினார்.

என் மகனைப்பார்க்க ரத்தக்கண்ணீர் வந்து விட்டது. கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் அடித்து கொன்று விட்டனர் என்று கண்ணீருடன் போலீசில் கூறினார். வழக்குப் பதிவு செய்த போலீசார், சனிக்கிழமையன்று நான்கு பேரை கைது செய்துள்ளனர். தப்பியோடிய பலரை தேடி வருகின்றனர்.

பெய்ஸ்சின் அம்மா பெர்சான் பானுவிற்கு மகனின் மரணம் கடும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. என்ன மகன் என்ன தவறு செய்து விட்டான் என்று இப்படி கொன்று விட்டனர். இனி அவனை யாராலும் திருப்பி தர முடியாது என்றும் என் மகனின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் கூறினார். குஜராத்தில் 17 வயது முஸ்லீம் இளைஞன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
Muslim youth beaten to death over alleged affair with tribal girl Police arrest four in Gujarat
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X