For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே.வங்கம்: மமதா அள்ளப் போகும் முஸ்லீம் வாக்குகள்.. இந்துக்களை வளைத்த பாஜக.. பரிதாப காங், கம்யூ.!

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok sabha elections 2019 | மே.வங்கம்: முஸ்லீம் வாக்கு யாருக்கு?.. பாஜகவின் வளர்ச்சி எப்படி?- வீடியோ

    கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் முஸ்லீம் வாக்காளர்கள் எண்ணிக்கை நாட்டின் இதரப் பகுதிகளை விட மிக முக்கியமானது. காரணம், இந்தியாவில் 14 சதவீத முஸ்லீம்கள் இருக்கிறார்கள் என்றால், மேற்கு வங்கத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 28 சதவீதமாகும். எனவே எப்போதுமே மேற்கு வங்கத்தில் முஸ்லீம்களின் வாக்கு வங்கி மிக முக்கியமானதாகவே உள்ளது.

    மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் 23 தொகுதிகளை பாஜக குறி வைத்துள்ளது. ஒரு சீட் கூட வர விடக் கூடாது என தீவிரமாக உள்ளது திரினமூல் காங்கிரஸ். இந்தத் தேர்தலில் வெல்லப் போவது எந்தக் கட்சி என்பதை விட மோடியா, மமதாவா என்பதுதான் மிகப் பெரிய போராட்டமாக மாறியுள்ளது.

    மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு பெரிய வாக்கு வங்கி கிடையாது. ஆனாலும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் தொடர்ந்து விடாமல் இந்த மாநிலத்துக்கு வந்து சென்று இருக்கும் வாக்கு வங்கியை பலப்படுத்தியதோடு, புதிய வாக்கு வங்கிக்கும் அச்சாரமிட்டுச் சென்றுள்ளதாக பாஜகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    மமதா தகர்த்த கோட்டை

    மமதா தகர்த்த கோட்டை

    மேற்கு வங்கத்தில் எப்போதுமே காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு இடையில்தான் நேரடி போட்டி இருக்கும். ஆனால் 35 வருடம் மேற்கு வங்கத்தை ஆண்டு வந்த கம்யூனிஸ்டுகளின் கோட்டையை திரினமூல் காங்கிரஸ் கட்சி தகர்த்த பிறகு அங்கு பாஜக உள்ளே புகுந்து தனக்கென ஒரு வாக்கு வங்கியை உருவாக்கி விட்டது. உண்மையில் இது காங்கிரஸ், இடதுசாரிகளை விட பலமானதாகவும் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

    பாஜகவின் வளர்ச்சி

    பாஜகவின் வளர்ச்சி

    கடந்த லோக்சபா தேர்தலில் 2 சீட்களில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. அதேபோல சட்டசபையிலும் 3 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஆனால் அதை வைத்து பாஜகவை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. இந்துக்களின் வாக்குகளை அது ஒரு புள்ளியில் கொண்டு வந்து வைத்துள்ளது. இது நிச்சயம் மமதா, காங்கிரஸ், இடதுசாரிகளுக்கு அபாயகரமானது.

    இடது வீழ்ந்து கை ஓங்கிய பாஜக

    இடது வீழ்ந்து கை ஓங்கிய பாஜக

    1996 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40 சதவீத வாக்குகளை அள்ளியது. ஆனால் 2014 தேர்தலில் இதை அப்படியே திரினமூல் காங்கிரஸ் அள்ளியது. காங்கிரஸுக்கு வெறும் 10 சதவீத வாக்குகளே கிடைத்தன. அதேபோல 2011ல் இடதுசாரிகள் வீழ்ந்தபோது பாஜகவின் வளர்ச்சி தொடங்கியது. பாஜகவின் வாக்கு சதவீதம் 13 சதவீதமாகவும், இடதுசாரிகளின் வாக்கு சதவீதம் 12 சதவீதமாகவும் 2014 தேர்தலில் இருந்தது.

    7 கட்ட வாக்குப் பதிவு

    7 கட்ட வாக்குப் பதிவு

    நடப்பு லோக்சபா தேர்தலில் 42 தொகுதிகளையும் பிரித்து 7 கட்ட வாக்குப் பதிவுக்கு விட்டுள்ளது தேர்தல் ஆணையம். அதில் முதல் இரண்டு கட்டங்களில் நடந்த வாக்குப் பதிவுக்கு உட்பட்ட தொகுதிகள் பாஜக சற்று பலமாக உள்ள தொகுதிகள் ஆகும். 3வது கட்ட தேர்தல் நடந்த தொகுதிகள் காங்கிரஸ் ஆதிக்கம் உள்ளவையாகும். 4, 5, 6, 7 ஆகிய கடைசி நான்கு கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகள் திரினமூல் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகும்.

    முஸ்லீம் வாக்குகள்

    முஸ்லீம் வாக்குகள்

    மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை இங்கு முஸ்லீம்களின் வாக்கு வங்கியும் முக்கியமானது. நாட்டின் மொத்த முஸ்லீம் மக்கள் தொகை 14 சதவீதம் என்றால் மேற்கு வங்கத்தில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 28 சதவீதமாகும். எனவே இங்கு இஸ்லாமிய சமூகத்தினர் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதும் முக்கியமானது.

    மமதாவுக்கு ஆதரவு

    மமதாவுக்கு ஆதரவு

    2014 லோக்சபா தேர்தலில் இஸ்லாமியர்களின் வாக்குகளில் 40 சதவீதத்தை மமதாவின் திரினமூல் வென்றது. இடதுசாரிகளுக்கு 30 சதவீத வாக்குகளும், காங்கிரஸ் கட்சிக்கு 20 சதவீத வாக்குகளும் கிடைத்தன. மற்றவர்களுக்கு 8 சதவீத வாக்குகள் கிடைத்தன. இந்த தேர்தலில் பெரிய அளவில் முஸ்லீம் வாக்குகள் சிதறுவது போல தெரியவில்லை என்று சொல்கிறார் என்டிடிவியின் பிரண்ணாய் ராய். குறிப்பாக திரினமூல் காங்கிரஸ் கட்சி முஸ்லீம் சமுதாயத்தினருக்கு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளதன் மூலம் அவர்களின் 70 சதவீத வாக்குகளைப் பெறக் கூடிய வாய்ப்புள்ளதாக ராய் சொல்கிறார்.

    பரிதாபத்தில் இடதுசாரிகள்

    பரிதாபத்தில் இடதுசாரிகள்

    காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறையைப் போலவே இந்த முறையும் 20 சதவீத இஸ்லாமிய வாக்குகள் கிடைக்கலாம். அதேசமயம், இடதுசாரிகளுக்கு முஸ்லீம்களின் ஆதரவு வெகுவாக குறையும் போலத் தெரிகிறது. அதாவது 5 சதவீத முஸ்லீம் வாக்குகளை மட்டுமே இடதுசாரிகள் பெற வாய்ப்புள்ளதாக பிரண்ணாய் கணித்துள்ளார்.

    இந்துக்களை வளைத்த பாஜக

    இந்துக்களை வளைத்த பாஜக

    மறுபக்கம் இந்துக்களின் வாக்குகள் இந்த முறை மமதாவுக்கு குறைந்து போக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அந்த சரிவை பாஜக தனது வளர்ச்சியாக மாற்றியுள்ளது. அதாவது பாஜகவின் இந்து வாக்கு வங்கி சற்று மேம்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்களிடையே பாஜகவுக்கு ஆதரவு அதிகம் உள்ளதாம். கிராமப்புறங்களின் மமதாவின் கொடியே உயரமாக பறக்கிறது.

    முடிவு வித்தியாசம்

    முடிவு வித்தியாசம்

    அதேபோல இளைஞர்கள் மத்தியில் பாஜகவுக்கு ஆதரவு அலை காணப்படுகிறது. அங்கு வீக் ஆக காணப்படும் திரினமூல் காங்கிரஸ் கட்சிக்கு 33 முதல் 50 வயது வரையிலானோரின் ஆதரவு அதிகமாக உள்ளது. மொத்தத்தில் மேற்கு வங்கத்தில் இந்த முறை வித்தியாசமான முறையில் முடிவுகள் வெளி வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாக சொல்கிறார் ராய்.

    English summary
    TMC may get 70% of Muslim votes in West Bengal in this LS polls, says NDTV's Prannoy Roy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X