For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என் கணவரை காணவில்லை.. அவருக்கு என்ன ஆனது.. ஹர்திக் பட்டேல் மனைவி பரபரப்பு புகார்.. பகீர்!

குஜராத் பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேலை ஒருமாதமாக காணவில்லை என்று அவரின் மனைவி புகார் அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

அகமதாபாத்: குஜராத் பட்டேல் இன தலைவர் ஹர்திக் பட்டேலை ஒருமாதமாக காணவில்லை என்று அவரின் மனைவி புகார் அளித்துள்ளார்.

2015ல் குஜராத் முழுக்க பட்டேல் ஜாதி மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இடஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி அவர்கள் போராட்டம் செய்தனர். இதில் பெரும்பாலான இடங்களில் போராட்டத்தை, பட்டேல் குழுவில் இளம் தலைவர் ஹர்திக் பட்டேல் முன்னின்று நடத்தினார்.

இந்த போராட்டத்திற்கு பின் இவர் பெரிய அரசியல் தலைவராக உருவெடுத்தார். தனி நபராக செயலாற்றி வந்த இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த நிலையில் இவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் 2015 குஜராத் கலவர வழக்கில் இவர் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டதால் ஹர்திக் பட்டேல் லோக்சபா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் விஸ்நகரில் இருந்த பாஜக கட்சியின் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.இதில் ஹர்திக் பட்டேலுக்கு 2 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதில் அவரின் சிறை தண்டனை மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.

போட்டி

போட்டி

இதனால் அவர் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இவரை காணவில்லை என்று புகார் எழுந்துள்ளது. கடந்த ஜனவரி 18ம் தேதியில் இருந்து இவர் வீட்டிற்கு வரவில்லை. அதேபோல் இவர் எங்கே இருக்கிறார் என்று இவரின் குடும்பத்திற்கே கூட தெரியவில்லை. இவரின் மனைவியும் இவரை காணாமல் தீவிரமாக தேடி வருகிறார்.

எங்கே சென்றார்

எங்கே சென்றார்

என் கணவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரை யாராவது கடத்தி இருக்க வாய்ப்புள்ளது. குஜராத் அரசு என் கணவரை பழி வாங்குகிறது. என் கணவரிடம் இருந்து ஆதரவு பெற பாஜக முயன்றது. அது சரியாக நடக்கவில்லை. அதனால் தற்போது என் கணவருக்கு எதிராக குஜராத் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசியல் தலைவர்கள் ஒன்றாக இதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்று, ஹர்திக் மனைவி கின்ஜல் தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் எப்படி

டிவிட்டர் எப்படி

ஹர்திக் மீது நிறைய தேச துரோக வழக்குகள் பதியப்பட்டுள்ளது. ஹர்திக் மீது மொத்தம் 3 தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. அதேபோல் ஜாமீனில் வெளியே வர முடியாத வகையில் மூன்று வழக்குகள் பதியப்பட்டு இருக்கிறது. போலீசார் ஒரு பக்கம் இவரை தீவிரமாக தேடி வருகிறார்கள். இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
My husband is missing, Didn't see him for a month says Hardik Patel wife to Police.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X