For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசியலில் இருந்து சோனியா காந்தி ஓய்வா? காங்கிரஸ் விளக்கம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் சோனியா காந்தி- வீடியோ

    டெல்லி: காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி நாளை பதவியேற்க உள்ளதால், அரசியலில் இருந்து சோனியா காந்தி முழுக்க ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதை காங்கிரஸ் கட்சி மறுத்துள்ளது.

    1998 ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். ஆனால் சமீப காரணமாக வயது மூப்பு காரணமாக அடிக்கடி உடல் நலக்குறைவு பிரச்சினையை அவர் சந்தித்து வருகிறார்.

    இதனால் அவ்வப்போது வெளிநாட்டில் சோனியா காந்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

    பிரசாரம் இல்லை

    பிரசாரம் இல்லை

    சமீபத்தில் நடைபெற்ற குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தல் பிரச்சாரங்களில் சோனியா காந்தி பிரசாரம் செய்யவில்லை. உடல் நலம் ஒத்துழைக்கவில்லை என்பதே இதற்கு காரணம்.

    தீவிர பிரசாரம்

    தீவிர பிரசாரம்

    ராகுல் காந்திதான் மேற்கண்ட இரு மாநிலங்கலிலும் தீவிர பிரசாரங்கள் செய்து வந்தார். இதையடுத்து காங்கிரஸ் தலைவராகவும் சமீபத்தில் ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    நாளை அறிவிப்பு?

    நாளை அறிவிப்பு?

    நாளை ராகுல் காந்தி முறைப்படி தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளார். இந்த நிலையில், சோனியா காந்தி நாளை முதல் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    ஓய்வு அறிவிப்பு?

    ஓய்வு அறிவிப்பு?

    நாடாளுமன்றத்திற்கு இன்று வருகை வந்த சோனியா காந்தியிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது, இனிமேல் என்னுடைய வேலை ஓய்வு பெறுவதுதான் என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம் சோனியா காந்தி நாளை தனது ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், அவர் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்துதான் ஓய்வு பெறப்போகிறார் என்றும், அரசியலில் அவரின் அனுபவம், அறிவு எங்களின் வழிகாட்டும் ஒளியாக தொடரும் என்று, அக்கட்சி தலைமை செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

    English summary
    My job now is to retire says Sonia Gandhi when asked in Parliament about what will be her role once Rahul Gandhi takes over as Congress President.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X