For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2 மாநில அரசுக்கு பங்கு.. என்னுடைய போனை மத்திய அரசு ஒட்டுக்கேட்கிறது.. மம்தா பானர்ஜி பகீர்

என்னுடைய போனை மத்திய அரசு ஒட்டுக்கேட்கிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பகீர் புகார் வைத்துள்ளார்.

Google Oneindia Tamil News

கொல்கத்தா: என்னுடைய போனை மத்திய அரசு ஒட்டுக்கேட்கிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பகீர் புகார் வைத்துள்ளார்.

இந்தியாவில் வாட்ஸ் ஆப் ஹேக்கிங் பிரச்சனை தற்போது பெரிய வைரலாகி உள்ளது. இது தொடர்பாக தற்போது புதிய விவரங்களும், தகவல்களும் வெளியாகி வருகிறது. இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ குரூப் என்ற நிறுவனம்தான் இந்த ஹேக்கிங்கை செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் முக்கிய பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள், களப்பணியாளர்கள் ஆகியோரின் வாட்ஸ் ஆப் ஹேக் செய்யப்பட்டு இருக்கிறது. இவர்களிடம் இருந்து முக்கியமான தகவல்கள் திருடப்பட்டு இருக்கிறது.

பேருந்து ஊழியர்கள் போராட்டத்திற்கு இப்படி கூட செக் வைக்கலாமா! தெலுங்கானா முதல்வர் ஷாக் அறிவிப்பு!பேருந்து ஊழியர்கள் போராட்டத்திற்கு இப்படி கூட செக் வைக்கலாமா! தெலுங்கானா முதல்வர் ஷாக் அறிவிப்பு!

பேசினார்

பேசினார்

இந்த நிலையில் இந்த வாட்ஸ் ஆப் விவகாரம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். அதில், இது மிகவும் பெரிய பிரச்சனை. இதை உடனடியாக மத்திய அரசு விசாரிக்க வேண்டும். பிரதமர் மோடி இதில் நேரடியாக தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்.

உரிமை இல்லை

உரிமை இல்லை

நாட்டில் தற்போது பேச்சு உரிமை கூட இல்லாமல் போய்விட்டது. நாம் இப்போதெல்லாம் போனில் கூட சுதந்திரமாக பேச முடியாது. யாராவது நாங்கள் பேசுவது எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இப்போது வாட்ஸ் ஆப் மெசேஜ்களை கூட ஹேக் செய்ய தொடங்கிவிட்டனர்.

என்னுடைய போன்

என்னுடைய போன்

என்னுடைய போனையும் கூட மத்திய அரசு ஒட்டுக்கேட்கிறது. எனக்கு இது முன்பே தெரியும். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. மத்திய அரசு என்னை முடக்க வேண்டும் என்று இப்படி செய்கிறது.

யார்?

யார்?

இரண்டு மாநில அரசுகளும் இதில் தலையிட்டுள்ளது. ஆனால் அவர்கள் யார் என்று சொல்ல மாட்டேன்.அதில் ஒரு மாநில அரசு பாஜகவை தலைமையாக கொண்டு இயங்கி வருகிறது, என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
My Phone Was Tapped, Centre and 2 states are behind it says Mamata Banerjee in a pressmeet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X