For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எனது சீனா பயணத்தால் ஆசிய நாடுகளுடனான உறவில் புதிய மைல்கல்: பிரதமர் மோடி நம்பிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தமது சீனப் பயணம் ஆசிய நாடுகளுடனான இந்திய உறவை மேம்படுத்துவதில் ஒரு புதிய மைல்கல்லை உருவாக்கும் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

எல்லை சர்ச்சை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது போன்ற பல கசப்பான பிரச்சினைகளுக்கு இடையே பிரதமர் மோடி நாளை சீனா செல்கிறார். பிரதமராக பதவியேற்ற பிறகு அவர் முதல் முறையாக நாளை சீனா செல்கிறார்.

இந்த முன்னிட்டு பிரதமர் மோடி இன்று டெல்லியில் சீனா பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

சீனப் பயணத்தை வெகுவாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 21-ம் நூற்றாண்டு ஆசிய நாடுகளுக்கானது. இந்தப் பயணத்தின் மூலம் இந்தியா - சீன நல்லுறவு மேலும் வலுப்பெறும்.

எனது சீனப் பயணம் ஆசிய நாடுகளுடனான இந்திய உறவை மேம்படுத்துவதில் ஒரு புதிய மைல் கல்லை உருவாக்கும்.

அண்மைக்காலமாக இந்தியா - சீனா நட்புறவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட சலசலப்புகள், வேற்றுமைகள் கூட பொறுமையாகவும் சற்று முதிர்ச்சியுடனும் கையாளப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

பின்னர் சீன செய்தியாளார்களுடனான தனது சந்திப்பு குறித்து ட்விட்டரில், சீன பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினேன். இந்தியா - சீனா வலுவான நட்புறவுக்கான சாத்தியத்தை எடுத்துரைத்தேன். வறுமை ஒழிப்பில் வளரும் நாடுகளின் பங்களிப்பு குறித்து ஆலோசித்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

English summary
PM Narendra Modi said on Wednesday that his three-day visit to China, which starts on Thursday, will further deepen India-China bilateral relations.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X