For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'நாய்க்கால் சூப், 'தவளை சூப்'; வெள்ளெலி சூப் ... அறுவை சிகிச்சை செய்வோருக்கான 'சத்தான' பானங்கள்!!

By Mathi
Google Oneindia Tamil News

கோஹிமா: அறுவை சிகிச்சை செய்து கொள்வோர் 'நாய்க்கால் சூப், 'தவளை சூப்' ; வெள்ளெலி சூப் ஆகியவற்றையும் அதன் கறியையும் சாப்பிட்டால் விரைவில் குணமடைந்துவிடுவார்களாம்.. இந்த நம்பிக்கை தாய்லாந்திலோ அல்லது கொரியாவிலோ அல்ல.. நம்ம இந்தியாவில்தான்..

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில் மொத்தம் 16 இனக்குழுக்கள் இருக்கின்றன. இன்றளவும் இந்த இனக்குழுக்கள் தங்களது அடையாளங்களைக் காப்பாற்றியே வருகின்றனர்.

பொதுவாக இந்தியாவில் உணவுப் பழக்கங்கள் ஒன்றோடொன்று கலந்த ஒன்றாகிவிட்டன. வட இந்தியாவின் சப்பாத்தியும் தென்னிந்தியாவின் தோசையும் இரு பிரிவு மக்களாலும் விரும்பி உண்ணப்படுகிறது..ஆனால் நினைத்தாலே ஒவ்வே என்று குமட்டிக் கொண்டு ஓட வைக்கும் உணவுப் பழக்கங்கள்தான் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் கடைபிடிக்கப்படுகிறது.

ஊர்வன, பறப்பன, ஓடுவன..

ஊர்வன, பறப்பன, ஓடுவன..

பொதுவாக வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றிலும் பன்றிக் கறி சாப்பிடுகின்றனர். ஆனால் நாம் பொதுவாக சொல்வாமே, ஊர்வன...பறப்பன..ஓடுறது எல்லாமே சாப்பிடுவாங்க என்று.. இது முழுவதும் பொருந்தும் நம்ம நாகாலாந்துவாசிகளுக்குத்தான்...

திமாப்பூர், கோஹிமா

திமாப்பூர், கோஹிமா

நாகாலாந்தின் இரண்டு முக்கிய நகரங்கள் ஒன்று திமாப்பூர். இது சமவெளியில் அசாம் எல்லையில் இருக்கிறது. மற்றொன்று மலைபிரதேசமான தலைநகர் கோஹிமா. இந்த இரண்டிலுமே இப்படி ஓடுவன, ஊர்வன, பறப்பன அனைத்தும் உயிரோடும் உரித்தும் சர்வசாதரணமாக விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

நாய்க்கறி ரேட்

நாய்க்கறி ரேட்

திமாப்பூரில் புதன்கிழமை சந்தை ரொம்பவும் புகழ்பெற்றது. குறிப்பாக நாய் கறி வாங்குவதற்கு.. உயிருடன் ஒரு கிலோ நாய் ரூ500- 600 வரைக்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ தவளை/ ஆற்று நத்தை ரூ200-300 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சிக்கன் = நாய்க்கறி

சிக்கன் = நாய்க்கறி

நமது ஊரில் விருந்தினர்கள் வந்துவிட்டால் ஓடிப் போய் மட்டன், சிக்கன் என எடுப்போம் அல்லவா.. அது போல நாகலாந்துவாசிகளின் உறவினர்கள் வீட்டு வந்துவிட்டால் மிகவும் 'ரிச்சான' நாய்க்கறிதான் ஸ்பெஷல் மெனுவாம்.

கோஹிமா பாம்பு கருவாடு

கோஹிமா பாம்பு கருவாடு

கோஹிமாவில் தினந்தோறும் சந்தைதான். கோஹிமாவின் மையப்பகுதியில் உள்ள அந்த சந்தைக்குள் காலடி வைத்தாலே பகீர் ரகங்கள்தான்..அத்தனை கடைகளிலுமே உயிருடன் தவளைகள், எலிகள், வெள்ளெலிகள், அணில்கள், பாம்புகள் என "விற்பனை"க்கு வைக்கப்பட்டிருக்கும்.

நாயை கொல்லும் விதம்

நாயை கொல்லும் விதம்

இவற்றுடன் இந்த ஜீவராசிகளின் கருவாடுகளும் ஏக பிரபலம். கோஹிமாவில் நாய் கறி விற்பனை செய்யும் இடத்துக்குப் போய்விட்டு திரும்பும் பிற மாநிலத்தவர் "ஜென்ம ஜென்மத்துக்கும்' மறந்துவிட முடியாத ஒரு இடம். நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு உயிருடன் நாயை பிடித்து வைத்து கொல்வார்கள்.. நமது ஊர்களில் ஆடு கோழியை ஒரே போடாக போட்டு வெட்டி விடுகிறார்கள். நாகாலாந்துவாசிகளோ அடித்தே கொன்று அதன் கறியை விற்பனை செய்கிறார்கள்.. குறிப்பாக ரத்தத்தையும்தான்..

யானை, குரங்கு எல்லாமும்..

யானை, குரங்கு எல்லாமும்..

இந்தப் பட்டியலில் யானை, குரங்கு என எல்லாமும் அடங்குகிறது. ஆனால் இது ரொம்ப ரொம்ப ரே.. சரி இவற்றை எல்லாம் சாப்பிட்டால் உடலுக்கு கேடு என்று நீங்கள் நினைத்தால் நாகாலாந்துவாசிகள் உங்களைத்தான் கேலியாக பார்ப்பார்கள்.. ஏனெனில் இந்த விலங்குகள் அனைத்துமே அவ்வளவு சத்தானவை என்று பெரும் பட்டியலே போடப்படுகிறது..

நாய்க்கால் சூப்

நாய்க்கால் சூப்

உதாரணத்துக்கு 'நாய்க்கால் சூப், 'தவளை சூப்'; வெள்ளெலி சூப் இந்த மூன்றையும் பார்ப்போம்.. அறுவை சிகிச்சை செய்து கொள்வோர் இந்த மூன்றையும் நிச்சயம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.

தவளைக் கறி, சூப்

தவளைக் கறி, சூப்

தவளைக் கறியும் சூப்பும் அறுவை சிகிச்சை செய்ததால் ஏற்பட்ட காயத்தை விரைவாக குணப்படுத்திவிடுமாம். இதில் இரும்புச் சத்து மிக அதிகமாம். குறிப்பாக புரோட்டீன் அதிகம் உள்ளதாம்.

நாய்க்கறி, நாய் சூப்

நாய்க்கறி, நாய் சூப்

அறுவை சிகிச்சை செய்து கொண்டோர் விரைவில் குணமடைந்து நல்ல வலுவாக இருக்க நாய்க்கறியை அவசியம் சாப்பிட்டாக வேண்டுமாம். அதாவது நாம் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த உடன் கோழி அடிச்சு போட்டு உடம்பை தேற்றிவிடுவார்களே அதுபோல நாய்க்கறிதான் ஃபேமஸ். அதுவும் நாய்க் கால் சூப் இருக்கிறது அல்லவா அதுதான் அதிக அளவு சத்து கொண்டதாம். அதில் கொஞ்சமாகத்தான் கொலஸ்ட்ரால் இருக்கிறதாம். பொட்டாசியம், கால்சியம் மற்றும் நிறைய வைட்டமின்கள் இருக்கிறதாம்.

வெள்ளெலி சூப்

வெள்ளெலி சூப்

நுரையீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டோரும் அறுவை சிகிச்சை செய்தோரும் வெள்ளெலி சூப்பையும் நாய்க்கறியும் சாப்பிட்டு வந்தால் நன்றாக தேறிவிடுவார்களாம்.

குரங்குக் கறி

குரங்குக் கறி

குறிப்பாக குரங்குக் கறியை ஆண்கள் சாப்பிட்டால் உடலுக்கு நல்ல சத்தாம்... ஆனால் குரங்கு கறிதான் நாகாலாந்தில் மிகவும் டிமாண்ட். இருப்பினும் பெண்கள் என்னவோ குரங்குக் கறியை விரும்பி சாப்பிடுவதில்லையாம்.

இப்படித்தான் நாகலாந்துவாசிகள் தங்களது உணவுப் பொருட்களுக்கு விரிவான 'சத்தான' விளக்கங்களை அளிக்கிறார்கள்.

English summary
When it comes to food and eating healthy, you probably hear a lot of opinions and "facts" from your parents, friends, relatives and neighbors. Nagaland is extremely rich in all these beliefs. Many food items are credited with good or bad qualities which may affect our health. Though many of these beliefs have some credibility, sometimes, they cause misconceptions. In Nagaland, the trend of stepping out to the market on the lookout for frogs, dog meat, rats etc, the moment a member of the family undergoes surgery is catching up in all households.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X