For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மணிப்பூர்: இம்பாலை அதிரவைத்த குண்டுவெடிப்பு- 5 போலீசார் உட்பட 6 பேர் படுகாயம்

Google Oneindia Tamil News

இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 5 போலீசார் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். கடந்த 2 நாட்களில் நடைபெற்ற 2-வது குண்டுவெடிப்பு சம்பவம் இது.

மணிப்பூரில் கடந்த 2-ந் தேதியன்று கிழக்கு இம்பால் மாவட்டம் தெலிபதி பகுதியில் குண்டுவெடித்தது. இதில் 3 எல்லை பாதுகாப்பு படையினர் படுகாயமடைந்தனர்.

Naga Peace Accord: Blast in Imphal leaves 5 injured

இந்நிலையில் இன்று தலைநகர் இம்பாலில் பிரதான மார்க்கெட் பகுதியான தங்கல் பஜாரில் காரில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. இதில் 5 போலீசார் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவத்துக்கு அம்மாநில முதல்வர் என். பைரேன் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தையும் பைரோன்சிங் பார்வையிட்டார்.

அப்போது பேசிய பைரோன்சிங், மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதி நடவடிக்கைகளை சீர்குலைக்க நினைக்கும் சமூக விரோதிகள்தான் இத்தகைய குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக மணிப்பூரில் அமைதி நீடித்து வருகிறது.

இதனால் விரக்தியடைந்துள்ள சமூக விரோதிகள்தான் இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் என்றார். மத்திய அரசு, நாகா அமைதி ஒப்பந்தத்தை செயல்படுத்த இருப்பதால் மணிப்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

English summary
An IED exploded today at Thangal market, in Imphal city injuring five policemen and a civilian.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X