For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியுரிமை மசோதா நகல்களை எதிர்த்து நாகா மாணவர்கள் போராட்டம்- ராஜ்பவன் முற்றுகை!

Google Oneindia Tamil News

Recommended Video

    Citizenship Amendment Bill | What is it

    கோஹிமா: அஸ்ஸாம், திரிபுராவைப் போல நாகாலாந்திலும் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

    நாகலாந்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படும். அரசு நடத்தும் இவ்விழாவில் நாகா பூர்வகுடிகள் பாரம்பரிய உடைகள் அணிந்து பல்வேறு நிகழ்வுகளை நடத்துவர்.

    Naga Students Federation hold protest against CAB

    இதனால் வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என போராட்டக்குழுக்கள் அறிவித்தன. ஆனாலும் வடகிழக்கின் அனைத்து மாணவர் கூட்டமைப்பு நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தில் நாகாலாந்து மாணவர் அமைப்புகள் பங்கேற்றன.

    கோஹிமாவில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பாக ஒன்று திரண்ட மாணவர்கள் குடியுரிமை மசோதாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அதே இடத்தில் குடியுரிமை திருத்த மசோதாக்களின் நகல்களை தீயிட்டும் எரித்தனர்.

    Naga Students Federation hold protest against CAB

    இலங்கை தமிழர்களின் நிலை என்ன ஆகும்? பொங்கி எழுந்த பினராயி விஜயன்.. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்புஇலங்கை தமிழர்களின் நிலை என்ன ஆகும்? பொங்கி எழுந்த பினராயி விஜயன்.. குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு

    அப்போது பேசிய நாகா மாணவர் அமைப்பின் த்அலைவர் நினோடோ அவோமி, சட்டவிரோத குடியேறிகளால் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநில பூர்வகுடிகளின் எதிர்காலம் மிகப் பெரிய அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கிறது. நாகாலாந்தில் இன்னர் லைன் பெர்மிட் நடைமுறையில் உள்ளது.

    ஆனால் அது ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தப்படவில்லை. இதனால் சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. குடியுரிமை திருத்த மசோதா என்பது சிறுபான்மையினருக்கும் பூர்வகுடி மக்களுக்கும் எதிரானது. நாம் நமது சொந்த நிலத்திலேயே சிறுபான்மையினராக்கப்படுவோம் என்றார்.

    English summary
    Naga Students’ Federation (NSF) hold protest against CAB on Tuesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X