For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகாலாந்து சட்டசபை தேர்தல்: ஒரு பெண் எம்.எல்.ஏ.கூட இல்லையே!

நாகாலாந்து சட்டசபையில் ஒரு பெண் எம்.எல்.ஏ.கூட இல்லை.

By Mathi
Google Oneindia Tamil News

கோஹிமா: நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலில் இந்த முறையும் ஒரு பெண் வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை.

நாகாலாந்து சட்டசபைக்கான தேர்தலில் மொத்தம் 5 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். பாஜக, தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சி தலா 1 பெண் வேட்பாளர்களை நிறுத்தின. தேசிய மக்கள் கட்சி 2 பெண் வேட்பாளர்களை களமிறக்கியது. ரேகா ரோசி என்கிற சுயேட்சை வேட்பாளரும் களம் கண்டார்.

Nagaland fails to Send a Woman MLA

தேசிய ஜனநாயக மக்கள் கட்சியின் அவான் கோன்யாக், அபோய் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் சில சுற்றுகளில் முன்னிலை வகித்தார். ஆனால் நாகா மக்கள் முன்னணியின் வேட்பாளர் ஈசாக் கோன்யாக் 6036 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

பாஜகவின் பெண் வேட்பாளர் ரஹிலா 2749 வாக்குகளுடன் 3-வது இடத்தைப் பெற்றார். நாகாலாந்து மக்கள் கட்சியின் பெண் வேட்பாளர்கள் ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகளைத்தான் பெற்றனர்.

நாகாலாந்து மாநிலம் உருவாகி 55 ஆண்டுகளாகிவிட்டது. இத்தனை ஆண்டுகளில் பெண் அரசியல்வாதிகள் நாகாலாந்தில் அரிதுதான்.

English summary
The Nagaland assembly will have no woman MLA this time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X