For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 மனைவிகள் டைவர்ஸ் ஆன நிலையில் சிறுமிகளை தத்தெடுத்து பலாத்காரம் செய்த மாஜி 'விஞ்ஞானி'!

By Mathi
Google Oneindia Tamil News

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் 2 மனைவிகள் விவகாரத்து பெற்று பிரிந்து சென்ற நிலையில் 3 சிறுமிகளை தத்தெடுத்து பல ஆண்டுகளாக பலாத்காரம் செய்த நீரி அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி மக்சூத் அன்சாரி (வயது 72) கைது செய்யப்பட்டுள்ளார்.

நாக்பூரில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு மையமான நீரியில் உதவி விஞ்ஞானியாக பணியாற்றியவர் மக்சூத் அன்சாரி. இவர் 2 முறை திருமணம் செய்தபோதும் குழந்தை பெற்றுக் கொள்ள இயலவில்லை.

Nagpur former scientist held for raping adopted girls for years

இதனால் அன்சாரியின் 2 மனைவிகளும் அவரை விட்டு பிரிந்து சென்ற்னார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆதரவற்ற இல்லம் ஒன்றுக்கு சென்று 3 சிறுமிகளை தாம் வளர்ப்பதாகக் கூறி தத்தெடுத்தார் அன்சாரி.

ஆனால் இந்த குழந்தைகளை தம்முடைய பாலியல் இச்சைக்காக அன்சாரி தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். தற்போது அந்த சிறுமிகளுக்கு 16,11, 7 வயதாகிறது.

இதில் 16 வயது சிறுமி தனது தோழி மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் அன்சாரி குறித்து புகார் கூறினார். இதனைத் தொடர்ந்து தந்தோலி போலீசில் அன்சாரி மீது முறைப்படி புகார் கொடுக்கப்பட்டது.

போலீசார் உதவியுடன் அன்சாரியின் வீட்டில் இருந்த 3 சிறுமிகளும் மீட்கப்பட்டனர். அன்சாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சிறுமிகள் அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

> >

English summary
Maqsood Ansari a former assistant scientist with NEERI in Nagpur, Maharashtra, was nabbed on Wednesday following a complaint by the eldest girl aged 16, who told police that she was exploited since she was in Class I and the accused had also offered to marry her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X