For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'தேசத்தை கட்டமைப்பதில் ஆர்.எஸ்.எஸ். பங்கு'- நாக்பூர் பல்கலை. பாடத் திட்டத்தில் சேர்ப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    தேசத்தை கட்டமைப்பதில் ஆர்.எஸ்.எஸ். பங்கு- நாக்பூர் பல்கலைகழகத்தில் சேர்ப்பு- வீடியோ

    நாக்பூர்: நாக்பூர் பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் தேசத்தை கட்டமைப்பதில் ஆர்.எஸ்.எஸ். பங்கு என்ற தலைப்பும் இடம்பெற்றிருப்பது சர்ச்சையாகி உள்ளது.

    நாக்பூரில் இயங்கி வரும் ராஷ்டிரசந்த் துகடோஜி மகாராஜ் பல்கலைக் கழகமானது பி.ஏ. இரண்டாம் ஆண்டு பாடப் புத்தகத்தில் தேசத்தை கட்டமைப்பதில் ஆர்.எஸ்.எஸ். பங்கு என்ற தலைப்பிலான பாடத்தை சேர்த்துள்ளது. அப்பல்கலைக் கழக்கத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    Nagpur University revises BA syllabus with RSS history

    ஆனால் நாக்பூர் பல்கலைக் கழகமோ வரலாற்றின் போக்குகளை மாணவர்கள் அறிந்து கொள்ளத்தான் இந்த பாடம் என்கிறது. இது தொடர்பாக கருத்து மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் அசோக் சவாண் கூறியுள்ளதாவது:

    தேசத்தின் விடுதலைக்காக ஆர்.எஸ்.எஸ். என்ன பங்களிப்பு செய்தது? ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை திணிக்கும் முயற்சிதான் இது.

    ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை மாணவர்கள் படிக்க வேண்டும் என விரும்புகிற அந்த பல்கலைக் கழகம் அதே ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 3 முறை ஏன் தடை செய்யப்பட்டது என்பதையும் மாணவர்களுக்கு கற்றுத் தருமா? இவ்வாறு அசோக் சவாண் கேள்வி எழுப்பியுள்ளார்.

    ஆனால் பாஜக தரப்போ, காங்கிரஸ் மத்தியில் ஆட்சி இருந்த போது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்தது என்பதுதான் வரலாறு என பதிலளித்துள்ளது,.

    English summary
    A new Controversy has erupted over the Nagpur University revised its BA Syllabus with the RSS History.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X