For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கையைத் தூக்குங்க.. அப்படியே நில்லுங்க.. சந்திரபாபு நாயுடுவை சோதனையிட்ட சி.ஐ.எஸ்.எப். படை!

கையைத் தூக்குங்க.. அப்படியே நில்லுங்க.. சந்திரபாபு நாயுடுவை சோதனையிட்ட சி.ஐ.எஸ்.எப். படை!

Google Oneindia Tamil News

விசாகப்பட்டனம்: சந்திரபாபு நாயுடுவை சோதனையிட்ட சி.ஐ.எஸ்.எப். படையினரால் ஆந்திர மாநிலத்தில் பெரும் பரபர்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் சோதனையிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

naidu undergoes cisf check up in vizag airport

மூன்று முறை முதல்வர், மூன்று முறை எதிர்க்கட்சித் தலைவர், இசட் ப்ளஸ் பாதுகாப்பு பிரிவில் உள்ள ஒருவரை நிறுத்தி சோதனை செய்வது முறையற்றது என தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் கொதித்து எழுந்துள்ளனர்.

நானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள் தயாரிப்பு... சபரிம்லைக்கு அனுப்பினார் நடிகர் ஜெயராமன் நானோ டெக்னாலஜியில் தங்கத் தகடுகள் தயாரிப்பு... சபரிம்லைக்கு அனுப்பினார் நடிகர் ஜெயராமன்

மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் நிச்சயம் அவர்களாக சோதனை நடத்தியிருக்க மாட்டார்கள் என்றும், டெல்லியில் இருந்து வந்த உத்தரவை அடுத்து அவர்கள் சோதனை நடத்தியிருக்கிறார்கள் எனவும் அடித்துக் கூறுகின்றனர் தெலுங்கு தேசம் கட்சியினர்.

ஆனால் தன்னை சோதனையிட்டதை சந்திரபாபு நாயுடு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அமித்ஷாவை ஜெகன் சந்தித்த அதே நாளில் நாயுடுவை அவமானப்படும் நிகழ்வு அரங்கேறியுள்ளது.

இதனிடையே சந்திரபாபு நாயுடுவிற்கு அளிக்கப்பட்டுள்ள இசட் ப்ளஸ் பாதுகாப்பை திரும்பப்பெறும் எண்ணம் உள்துறைக்கு இருந்ததாம். ஆனால் நக்சலைட்களால் அச்சுறுத்தல் இருப்பதாக ஐ.பி.கொடுத்த தகவலால் அந்த எண்ணத்தை கைவிட்டதாம்.

தான் அவமானப்படுத்தப்பட்ட செயலுக்கு மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லையே என்பது தான் நாயுடுவிற்கு உள்ள ஒரே வருத்தமாம்.

English summary
Former Andhra Chief Minister Chandrababu Naidu was undergone CISF check up in Vizag airport
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X