For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மழை வேண்டி சிறுவனை நிர்வாணமாக ஊரை சுற்றவிட்ட கிராம மக்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சித்ரதுர்கா: மழை வேண்டி சிறுவனை நிர்வாணமாக ஊருக்குள் நடக்கவிட்டுள்ள சம்பவம் கர்நாடக மாநில கிராமம் ஒன்றில் நடந்துள்ளது.

மழை வேண்டுமானால் இளம் பெண்ணை நிர்வாணமாக ஊருக்குள் நடக்க விட வேண்டும்.. என்பது போன்ற காட்சிகளை தமிழ் சினிமாக்களில் அதிகம் பார்த்திருப்பீர்கள். ஆனால், சிறுவனை அப்படி நடக்கவிட்ட சம்பவம் சித்ரதுர்கா மாவட்டம் பண்டரஹள்ளியில் நடந்துள்ளது.

நிர்வாணமாக நிறுத்தப்பட்டிருக்கும் சிறுவன் மீது முதலில் நீர் தெளிக்கப்பட்டு சில பூஜைகள் செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து, தலையில் சாமி சிலை வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்படுகிறார். அப்போது பெண்களும் கூட வருகிறார்கள்.

மேளங்களும் அடிக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்த காட்சி கர்நாடகாவில் வைரலாக பரவி வருகிறது.

English summary
A boy was paraded naked at a drought-hit village in Chitradurga district to please the rain god.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X