For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீடியோ.. பலத்த காற்றில்.. சரிந்து விழுந்தது.. டிரம்ப் வருகைக்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு!

Google Oneindia Tamil News

அஹமதாபாத்: குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் 'நமஸ்தே டிரம்ப்' நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது. அங்கு மோடியும், டிரம்பும் மைதனாத்திற்கு நுழைய இருந்த இடத்தில் அவர்களை வரவேற்பதற்காக வைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவு காற்றில் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதல்முறையாக நாளை இந்தியா வருகிறார். பிரதமர் மோடி அமெரிக்கா சென்ற போத நமஸ்தே மோடி அதாவது வணக்கம் மோடி என்று மிகப்பெரிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

ஹுஸ்டன் நகரில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து உரையாற்றினார்.

நச்சுன்னு 25 பெட்.. குட்டி ஆஸ்பத்திரி ரெடி.. டிரம்ப்பை வரவேற்க தடபுடலாக தயாரான மோத்திரா ஸ்டேடியம்!நச்சுன்னு 25 பெட்.. குட்டி ஆஸ்பத்திரி ரெடி.. டிரம்ப்பை வரவேற்க தடபுடலாக தயாரான மோத்திரா ஸ்டேடியம்!

அஹமதாபாத் செல்கிறார்

அஹமதாபாத் செல்கிறார்

அதே பாணியில் இந்தியா வரும் டிரம்புக்கும் வரவேற்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி குஜராத் மாநிலம் அஹமதாபாத்திற்கு அதிபர் டிரம்ப் நாளை வருகை தர உள்ளார். அத்துடன் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திறகும் செல்கிறார்கள். அவரது பயணத்திட்டமிடல்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன.

13 கிலோமீட்டர்

இந்நிலையில் அஹமதாபாத்தில் டிரம்ப் பங்கேற்க போகும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடியை வரவேற்று அவர் வரும் 13 கிலோமீட்டருக்கும் மக்கள் திரண்டு வந்து வரவேற்க ஏற்பாடுகள் நடந்துள்ளது. இது ஒரு புறம் எனில், டிரம்பை வரவேற்று அலங்கார வளைவுகள் நகரில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

சரிந்து விழுந்தது

சரிந்து விழுந்தது

நிகழ்ச்சி நடைபெற உள்ள மைதானத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட அலங்கார வளைவு பலத்த காற்றடித்த காரணத்தால் சனிக்கிழமை இரவு சரிந்து விழுந்துவிட்டது. நல்லவேளையாக அப்போது அதன் அருகே யாரும் இல்லை. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அசம்பாவிதங்களும் நிகழவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் அதை சீர் செய்து தற்காலிகமாக ஒரு அலங்கார வளைவை அந்த இடத்தில் அவசர அவசரமாக வைத்துள்ளார்கள்.

அதிகாரிகள் விசாரணை

அதிகாரிகள் விசாரணை

இந்த அலங்கார வளைவை கடந்து தான் பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் வருவதாக இருந்தது. ஒரு வாரம் முன்பு இருந்தே அமெரிக்க அதிபரை வரவேற்கும் பணிகள் நடந்து வரும் நிலையில். அலங்கார வளைவு சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே மற்ற இடங்களில் உள்ள அலங்கார வளைவுகள் குறித்தும் இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

English summary
‘Namaste Trump’: A gate built outside the Motera stadium collapsed before the Namaste Trump event in Ahmedabad
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X