For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாஜ்மஹாலில் உள்ள மசூதியில் தொழுகைக்கு தடை... 4 பேரை கைது செய்த காவல் துறை

Google Oneindia Tamil News

ஆக்ரா: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் வளாகத்தில் அமைந்திருக்கும் மசூதியில் தொழுகை நடத்திய 4 பேரை காவல்துறை கைது செய்து இருக்கிறது.

முகலாய பேரரசர் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்ட இந்த கல்லறைக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள்.

பாஜக பற்றிய திமுகவின் 3 பொய்கள் சுக்குநூறானது! பிரதமர் மோடி பேச்சால் வானதி சீனிவாசன் உற்சாகம்! பாஜக பற்றிய திமுகவின் 3 பொய்கள் சுக்குநூறானது! பிரதமர் மோடி பேச்சால் வானதி சீனிவாசன் உற்சாகம்!

இந்த தாஜ்மஹால் அருகே ஷாஜகானால் மசூதி ஒன்றும் கட்டப்பட்டது. அழகிய வடிவமைப்புடன் இருக்கும் அந்த மசூதியில் தொழுகை மற்றும் இதர இஸ்லாமிய மத வழிபாடுகள் ஷாஜகான் காலத்திலிருந்தே நடத்தப்பட்டு வந்தன.

4 பேர் கைது

4 பேர் கைது

இதனிடையே, இந்திய அரசின் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த மசூதியில் தொழுகை நடத்தியதாக கூறி 4 பேரை ஆக்ரா மாவட்ட காவல்துறை கைது செய்திருக்கிறது. சுற்றுலாவுக்காக தாஜ்மஹால் வந்தவர்கள் தொழுகை நடத்துவதை கண்ட மத்திய தொழில்பிரிவு பாதுகாப்பு படையினர் அவர்களை பிடித்து காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

 நீதிமன்றத்தில் ஆஜர்

நீதிமன்றத்தில் ஆஜர்

4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் மூன்று பேர் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம்கர் பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவித்து இருக்கின்றனர். கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளதாக ஆக்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் கூறியுள்ளார்.

 தொழுகைக்கு தடையா?

தொழுகைக்கு தடையா?

இதனிடையே தாஹ்மஹாலில் உள்ள மசூதியில் தொழுகைக்கு ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியும் எழத் தொடங்கி இருக்கிறது. தாஜ்மஹாலில் முன்பெல்லாம் எல்லா நாட்களும் தொழுகை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டு வந்ததாகவும், ஆனால், தற்போது வெள்ளிக்கிழமை மட்டுமே தொழுகை நடத்த இந்திய தொல்லியல்துறை அனுமதிப்பதாகவும் தாஜ்மஹால் இண்டெஜமியா குழு தலைவர் இப்ராஹிம் ஜெய்தி குற்றம்சாட்டி இருக்கிறார்.

வெள்ளிக்கிழமை மட்டும் அனுமதி

வெள்ளிக்கிழமை மட்டும் அனுமதி

இதற்கு பதிலளித்துள்ள இந்திய தொல்லியல் துறையின் ஆக்ரா வட்டத்தின் தொல்லியல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் பட்டேல், உச்சநீதிமன்றம் தாஜ்மகால் வளாகத்திற்குள் தொழுகை நடத்துவதற்கு தடை விதித்துள்ளது என தெரிவித்துள்ளார். தாஜ்கஞ்ச் பகுதியில் வசிக்கும் மக்கள் மட்டுமே இங்கு தொழுகைக்காக அனுமதிக்கப்படுவதாகவும், வெள்ளிக்கிழமை பகல் 12 மணி முதல் 2 மணி வரை தொழுகை நடத்திக்கொள்ளலாம் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

English summary
Namaz was banned inside Tajmahal Mosque - 4 arrested for praying in Tajmahal mosque: உலக அதிசயங்களுல் ஒன்றான தாஜ்மஹால் வளாகத்தில் அமைந்திருக்கும் மசூதியில் தொழுகை நடத்திய 4 பேரை காவல்துறை கைது செய்து இருக்கிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X