For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முதல்ல 'நமோ டீ'.. இப்போ 'நமோ ஆண்டி வைரஸ்'…!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழ்நாட்டில்தான் அம்மா உணவகம், அம்மா உப்பு என்று போட்டி போடுகிறது என்றால் தற்போது புதியதாக நமோ பெயரில் சில பொருட்கள் உருவாகி சக்கைப் போடு போட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்னோவேஷன் என்ற ஐடி நிறுவனமானது கணினியை பாதுகாக்கும் ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் ஒன்றுக்கு "நமோ" என்று பெயர் சூட்டியுள்ளது.

நமோ என்பது தற்போதைய பிரதமர் நரேந்திர மோடியின் செல்லப் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலவசப் பாதுகாப்பு:

இலவசப் பாதுகாப்பு:

இந்த புதிய மென்பொருளானது நம்முடைய கணினிக்கு இலவச பாதுகாப்பை அளிக்கும் திறன் பெற்றது. மேலும், இதனால் வைரஸ் போன்ற மால்வேர் பாதிப்புகளும் தடுக்கப் படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்வான்ஸ் வெர்ஷன் விரைவில்:

அட்வான்ஸ் வெர்ஷன் விரைவில்:

தற்போதைய நிலையில் இந்த சாப்ட்வேரின் அடிப்படை வெர்ஷன்தான் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான மேம்படுத்தப்பட்ட வெர்ஷன்கள் விரைவில் வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆப்பிள், விண்டோஸ் போன்ற ஆபரேசிங் சிஸ்டங்களுக்கும் இந்த சாப்ட்வேர் உபயோகப்படும்.

 எந்த தொடர்பும் இல்லை:

எந்த தொடர்பும் இல்லை:

நமோ என்று பெயர் வைத்துள்ளதால் தாங்கள் எந்த கட்சி தலைவர்களுடனும் மற்றும் கட்சிகளுடனும் எந்த தொடர்புடையவர்கள் அல்ல என்றும், இதற்கும் நரேந்திர மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறியுள்ளது அந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

3 வது இடம்:

3 வது இடம்:

இணையதள பயன்பாட்டில் உலக அளவில் இந்தியா 3 ஆவது இடத்தில் உள்ளது. அதில் 13 சதவீதம் பேர் மட்டுமே முறையான லைசென்ஸ் வாங்கிக் கொண்டு ஆண்டி வைரஸ் சாப்ட்ஃவேர் பயன்படுத்துகிறார்களாம்.

இலவச பதிப்பு:

இலவச பதிப்பு:

அப்படி இல்லாமல் வெறும் டிரையல் வெர்ஷன் சாப்ட்வேர்களை மட்டுமே பயன்படுத்துபவர்களுக்காகத்தான் இந்த இலவச சாப்ட்வேர் வெளியிடப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

English summary
Homegrown IT firm Innovazion has named its new antivirus software ‘NaMo’, the popular short name of Prime Minister Narendra Modi. The software will provide free protection to PC users against malware and virus attacks. While the current version offers basic protection, the company plans to launch advanced versions of the software as well as those for Apple’s Mac PCs. The current software will also get regular updates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X