For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்போசிஸ் நிறுவனத்தின் நான் எக்ஸிகியூடிவ் சேர்மனாக நந்தன் நிலகேனி நியமனம்

இன்போசிஸ் நிறுவனத்தில் நான் எக்சிகியூடிவ் சேர்மனாக நந்தன் நிலகேனி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூரு: இன்ஃபோசிஸ் நிறுவனத்தின், நான் எக்ஸிகியூடிவ் சேர்மனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் நந்தன் நிலகேனி.

பெங்களூரை தலைமையிடமாக கொண்ட இன்போசிஸ் நிறுவனத்தை 1981ம் ஆண்டு தொடங்கிய 7 நிறுவனர்களில் ஒருவர், நந்தன் நிலகேனி. இன்போசிஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் இயக்குனர் பதவிகளை விஷால் சிக்கா சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

Nandan Nilekani appointed as non-executive Chairman of Infosys

இதையடுத்து அதன் பங்குகள் சரிவை சந்தித்தன. அதை மீட்க, நந்தன் நிலகேனியை இன்போசிஸ் மீண்டும் அழைத்துள்ளது.

இன்போசிஸ் நிறுவனத்தில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அமெரிக்க விசா கெடுபிடிகள் போன்றவற்றால் இன்போசிஸ் நிறுவனம் சிக்கல்களை சந்தித்து வந்தது.

இந்த சிக்கல்கள் ஒருபுறம் இருக்க உயர் பதவிகளில் இருப்பவர்கள் தங்கள் சம்பளத்தை பல மடங்கு உயர்திக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து, மேலாண் இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் இயக்குனர் பதவிகளை விஷால் ஷிக்கா ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில், அந்த இடத்தை நிரப்ப மீண்டும் நந்தன் நிலகேனியை இன்போசிஸ் நிறுவனம் நியமித்துள்ளது.

நீண்ட நிர்வாக அனுபவம் கொண்ட நந்தன் நிலகேனி இன்போசிஸ் நிறுவனத்துக்கு திரும்பவும் வரவேண்டும் என்ற கோரிக்கை பல மட்டங்களிலும் பேசப்பட்டது.

இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியும் நந்தன் நிலகேனி மீண்டும் வருவதை விரும்பினார். நந்தன் நிலகேனி திரும்ப வருவதாக செய்திகள் வெளியானதுமே இன்போசிஸ் நிறுவன பங்குகள் சுமார் 2.8 சதவீதம் அளவுக்கு உயர்வை சந்தித்தன.

இந்த நிலையில் நந்தன் நிலகேனி நான் எக்ஸிகியூடிவ் சேர்மனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நந்தன் நிலகேனியின் வருகையால் இன்போசிஸ் பலம் பெறும் என்ற நம்பிக்கை பரவி வருகிறது. நிலகேனி, இன்ஃபோசிஸுக்கு திரும்பும் செய்திகள் வெளியானதுமே இன்ஃபோசிஸ் பங்குகள் சுமார் 2.8 சதவீதம் அளவுக்கு உயர்வை சந்தித்துள்ளன.

English summary
Nandan Nilekani appointed as non-executive Chairman of Infosys,Infosys co-founder and former chief executive Nandan Nilekani returned to the company board after being named non-executive,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X