For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசு பஸ்ஸில் பயணித்து வாக்கு சேகரித்த நந்தன் நிலகேனி

By Siva
|

பெங்களூர்: தெற்கு பெங்களூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நந்தன் நிலகேனி அரசுப் பேருந்தில் பயணம் செய்து வாக்கு சேகரித்தார். மேலும் சாலையோர டீக்கடையில் டீ குடித்தார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெற்கு பெங்களூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நந்தன் நிலகேனி போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் தனது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

இன்று காலை அவர் பிரச்சாரம் செய்த இடத்தை பார்ப்போம்.

பேருந்து

பேருந்து

இன்று காலை ஜெயநகர் பேருந்து நிலையித்திற்கு வந்த நிலகேனி அரசு பேருந்து ஒன்றில் ஏறினார். ரூ.12 கொடுத்து டிக்கெட் எடுத்து பேருந்தில் இருந்தவர்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் இந்திரா நகரில் அவர் பேருந்தில் இருந்து இறங்கிச் சென்றார்.

பஸ் தினம்

பஸ் தினம்

அவர் பஸ் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். மேலும் பஸ் தினம் என்பது அரசு போக்குவரத்து திட்டத்தின் பக்கம் கவனத்தை ஈர்க்கும் ஒரு சிறந்த முயற்சி என்று அவர் தெரிவித்தார்.

நிலகேனி

நிலகேனி

பேருந்தில் சாதாரண மக்களுடன் அமர்ந்து பயணம் செய்த நிலகேனி அவர்களுடன் பேசி அவர்கள் என்ன செய்கிறார்கள், அரசு போக்குவரத்து எப்படி உள்ளது உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

டீ

டீ

பேருந்தில் பயணம் செய்த நிலகேனி சாலையோரம் இருந்த டீக்கடைக்கு சென்றார். அந்த கடையில் டீ வாங்கிக் குடித்துக் கொண்டே மக்களிடம் கலந்துரையாடினார்.

English summary
South Bangalore congress candidate Nandan Nilekani boarded a BMTC bus from Jayanagar bus stop and expressed his support for Bus Day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X