For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகத்திலேயே அதிகம் தேடப்பட்ட பிரபலம்.. நந்தன் நிலகேனி!

|

பெங்களூர்: கூகுளில் அதிகம் தேடப்பட்ட கர்நாடக பிரபலம் நந்தன் நிலகேனி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் லோக்சபா தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார் நிலகேனி. இவர் இன்போசிஸ் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் ஆதார் அடையாள அட்டை திட்ட தலைவரும் ஆவார்.

கூகுளில் இவரைத்தான் அதிக அளவில் கர்நாடகத்தினர் தேடியுள்ளனர். இவருக்கு அடுத்த இடம்தான் முதல்வர் சித்தராமையாவுக்கு.

நிலகேனி டாப்

நிலகேனி டாப்

நிலகேனி முதலிடத்தைப் பிடித்துள்ள நிலையில் மற்ற அரசியல் தலைவர்களை இவர் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

சித்தராமையா, எடியூரப்பா, தேவெ கெளடா

சித்தராமையா, எடியூரப்பா, தேவெ கெளடா

முதல்வர் சித்தராமையா, எடியூரப்பா, தேவெ கெளடா ஆகியோரெல்லாம் இவருக்குப் பின்னால்தான் வருகின்றனர்.

இன்போசிஸ் பாலகிருஷ்ணன் சரிவு

இன்போசிஸ் பாலகிருஷ்ணன் சரிவு

இன்போசிஸ் நிறுவனத்தில் முன்பு பணியாற்றி தற்போது ஆம் ஆத்மி சார்பில் பெங்களூர் மத்திய தொகுதியில் போட்டியிடும் பாலகிருஷ்ணனுக்கு கிரேஸ் குறைந்துள்ளது. அவரைத் தேடியோர் எண்ணிக்கை குறைந்து விட்டதாம்.

நிலகேனி அளவுக்கு இல்லை

நிலகேனி அளவுக்கு இல்லை

நிலகேனி அளவுக்கு பாலகிருஷ்ணனுக்கு கூகுளில் தேடுவோர் மத்தியில் செல்வாக்கு இல்லை.

நிலையான இடத்தில் மோடி, ராகுல், கெஜ்ரிவால்

நிலையான இடத்தில் மோடி, ராகுல், கெஜ்ரிவால்

அதேசமயம், மற்ற மாநிலங்களைப் போலவே கர்நாடக மக்கள் மத்தியிலும் மோடி, ராகுல் காந்தி, கெஜ்ரிவால் ஆகியோருக்கு தொடர்ந்து நிலையான தேடுதல் ஆதரவு காணப்படுகிறது.

மோடிக்கு கூடுதல்

மோடிக்கு கூடுதல்

மோடிக்கு தேடுதல் கூடியுள்ளது. அதேசமயம், ராகுலுக்குக் குறைந்துள்ளது. கெஜ்ரிவாலுக்கும் குறைந்துள்ளது.

அதிகம் தேடப்பட்ட கட்சிகள்

அதிகம் தேடப்பட்ட கட்சிகள்

கர்நாடகத்தில் அதிகம் கூகுளில் தேடப்பட்ட கட்சிகளாக ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகியவை உள்ளன. ஆம் ஆத்மிக்கு இதில் முதலிடம் இருப்பது ஆச்சரியத்துக்குரியது.

English summary
Nandan Nilekani, Congress candidate from Bangalore Lok Sabha constituency, is the most searched name on Google compared to Karnataka Chief Minister Siddaramaiah and other leaders. "State political veterans such as Siddaramaiah, BS Yeddyurappa (former chief minister) and HD Deve Gowda (former prime minister) lag behind a political entrant like Nilekani, as our search trends reveal," world's leading search provider Google said in a statement here Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X