For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதார் அட்டை ஆணைய தலைவர் நந்தன் நிலகேனி ராஜினாமா!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

பெங்களூர்: ஆதார் அட்டை ஆணையத் தலைவர் நந்தன் நிலகேனி ராஜினாமா செய்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நந்தன் நிலகேனி, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து கடந்த 2007 ஆம் ஆண்டு விலகினார். அதன்பின், ஆதார் அடையாள அட்டை திட்டத்துக்காக உருவாக்கப்பட்ட அமைப்பான, இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

Nandan Nilekani resigns as UIDAI Chief

இந்நிலையில், நந்தன் நிலகேனி கடந்த 9 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதை தொடர்ந்து, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிட அவருக்கு காங்கிரஸ் கட்சி ‘சீட்' வழங்கியுள்ளது. நந்தன் நிலகேனி, பா.ஜ.க. சார்பில் 5 முறை எம்.பி.யாக பதவி வகித்த ஆனந்த குமாரை எதிர்த்து களமிறங்க உள்ளார்.

இதையடுத்து, இந்திய தனிப்பட்ட அடையாள அட்டை ஆணைய தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் அனுப்பி உள்ளார்.

English summary
Nandan Nilekani resigned as chairman of the Unique Identification Authority of India on Thursday, leaving a question mark on the future of India's government's biggest exercise to issue a single identity card for each of its citizens.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X