For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நானோவுக்கு "டாட்டா"..?.. வாங்க ஆள் இல்லை.. ஒரே ஒரு கார் மட்டுமே உற்பத்தியானதால் பரபரப்பு!

Google Oneindia Tamil News

Recommended Video

    வந்த வேகத்தில் காணாமல் போன டாட்டா நானோ-வீடியோ

    டெல்லி: பெரும் பரபரப்பும் எதிர்பார்ப்பும் இருந்தது டாடா நிறுவனத்தின் நானோ கார் வந்தபோது. ஆனால் வந்த வேகத்தில் அது காணாமல் போய் விட்டது. காரணம், கார் குறித்த எதிர்பார்ப்புக்கு மாறாக அதன் செயல்பாடுகளும், விலையும் இருந்ததால்.

    ஒரு லட்சம் ரூபாயில் கார் என்பதுதான் நானோவை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு ரத்தன் டாடா சொன்ன உத்தரவாதம். ஆனால் விலை கூடுதலாகவே இருந்தது. இப்போது மேலும் எகிறி விட்டது. வசதிகளும் கூட திருப்தி தருவதாக இல்லை. உடல் பருமன், உயரமானவர்களுக்கு நானோ பொருத்தமான காரும் இல்லை.

    இதுபோன்ற பல்வேறு காரணங்களால் காருக்கான கிராக்கி குறைந்து விட்டதாக தெரிகிறது. இதனால் நானோ காரின் உற்பத்தியை டாடா நிறுவனம் நிறுத்தலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதை விட முக்கியமாக டீலர்கள், புக்கிங்கை நிறுத்தி விட்டனர் என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது. இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் இதுவரை டாடா நிறுவனம் வெளியிடவில்லை.

    ஒரு கார் மட்டுமே உற்பத்தி

    ஒரு கார் மட்டுமே உற்பத்தி

    ஆனால் சனந்த் பேக்டரியில் கடந்த மாதம் ஒரே ஒரு கார்தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாம். இதை வைத்துப் பார்க்கும்போது நானோவை நிறுத்த டாடா முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது.

    இறங்கிப் போன நானோ மோகம்

    இறங்கிப் போன நானோ மோகம்

    10 வருடங்களாக இந்திய சாலைகளை அலங்கரித்துக் கொண்டுள்ளது நானோ. உலகின் விலை மலிவான கார் என்பதுதான் இதன் புகழுக்குக் காரணம். ஆனால் அதன் பொலிவு படு வேகத்தில் இறங்கிப் போய் விட்டது. தற்போது யாரும் நானோவை விரும்புவதில்லை.

    கார் உற்பத்தி நிறுத்தம்

    கார் உற்பத்தி நிறுத்தம்

    டாடா மோட்டார்ஸின் நானோ கார்கள் சனந்த் ஆலையில்தான் உற்பத்தியாகின்றன. அங்கு தற்போது உற்பத்தி கிட்டத்தட்ட நின்று விட்டது. ஜூன் மாதத்தில் ஒரே ஒரு கார்தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த பேக்டரியானது, ஒரு மாதத்திற்கு 2.4 லட்சம் கார்களை தயாரிக்கக் கூடிய வசதி படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    உதிரி பாக தயாரிப்பு நிறுத்தம்

    உதிரி பாக தயாரிப்பு நிறுத்தம்

    நானோ காருக்கான உதிரி பாக தயாரிப்பை நிறுத்தி விடுமாறு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம்தான் நானோ காரால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 1000 கோடி இழப்பு என்று கூறியிருந்தார். நானோவை நிறுத்துமாறும் அவர் இயக்குநர்கள் குழுவிடம் வற்புறுத்தியிருந்தார். ஆனால் அதற்கு இயக்குநர்கள் குழு சம்மதிக்கவில்லை.

    English summary
    Tata motor's Nano car journey may come to an end soon, sources say as only one unit was produced in its Sanand factory.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X