For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உண்ணாவிரதம் இருக்க திடீரென மோடி முடிவெடுத்தது ஏன்?

நாடாளுமன்ற பட்ஜெட் இரண்டாவது கூட்டத்தொடர் முற்றிலுமாக முடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாளை பாஜக சார்பில் உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டுள்ளது.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    உண்ணாவிரதம் எடுக்க முடிவெடுத்த மோடி- வீடியோ

    டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் இரண்டாவது கூட்டத்தொடர் முற்றுலுமாக முடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாஜக சார்பில் நாளை உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்தர மோடி, அமித்ஷா, பாஜக எம்பிகள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் 5ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் இரண்டாவது கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக 23 நாட்கள் முடங்கின. லோக்சபா, ராஜ்யசபாவின் 250 மணி நேரங்கள் வீணடைந்ததாக நாடாளுமன்ற அலுவலகம் தெரிவித்திருந்தது. கடந்த 18 ஆண்டுகளில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே மிக மோசமான கூட்டத்தொடர் இது தான் என்றும் கூறப்படுகிறது.

    ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, எஸ்.சி.,எஸ்.டி. சட்ட தீர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம், வங்கிக் கடன் மோசடி உள்ளிட்ட விவகாரங்களை முன்வைத்து காங்கிரஸ், அ.தி.மு.க., தெலுங்குதேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூட்டத் தொடர் முடிவடைந்து நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சிகளை கண்டித்து உண்ணாவிரதம்

    எதிர்க்கட்சிகளை கண்டித்து உண்ணாவிரதம்

    இந்நிலையில் பாஜக தொடங்கிய 38வது ஆண்டு தினத்தை அந்தக் கட்சி கொண்டாடி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமார், கடந்த 23 நாட்களாக நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் முடக்கிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரின் போக்கை கண்டித்து நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

    பாஜக எம்பிகள் உண்ணாவிரதம்

    பாஜக எம்பிகள் உண்ணாவிரதம்

    பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்பார்கள் என்றும் அனந்தகுமார் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய அலுவல்களைத் தொடர்ந்தபடியே உண்ணாவிரதம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கர்நாடகாவின் ஹீப்ளியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றுக் கொண்டே உண்ணாவிரதம் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    மன்னிப்பு கேட்க வேண்டும்

    மன்னிப்பு கேட்க வேண்டும்

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் உண்ணாவிரத போராட்டம் ஒரு கேலிக்கூத்தாகும் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அந்தப் கட்சியின் தொடர்புத் துறை பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜித்வாலா நாடாளுமன்றம் 250 மணி நேரம் செயல்படாமல் முடக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

    உண்ணாவிரதம் கேலிக்கூத்தாக இருக்கிறது

    உண்ணாவிரதம் கேலிக்கூத்தாக இருக்கிறது

    பிரதமர் மோடி அரசு அறிவித்துள்ள உண்ணாவிரத போராட்டம் ஒரு கேலிக்க்கூத்து. இளைஞர்கள், தலித்கள் உள்பட பலரிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் சுர்ஜித்வாலா தெரிவித்தார்.

    English summary
    PM Narendra Modi will observe a day-long fast tomorrow along with BJP MPs to protest against the recent washout of the second half of the budget session of Parliament.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X