For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோத்ரா சம்பவத்தில் மோடி நழுவ முடியாது: வாஜ்பாய் உறவினர் கருணா சுக்லா

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: குஜராத் கலவரத்துக்கு காரணமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தமக்கு பங்கில்லை என்று கையை கழுவிவிட முடியாது என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சகோதரி மகளான கருணா சுக்லா கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியில் தாம் புறக்கணிக்கப்படுவதாக கூறி அண்மையில் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார் கருணா சுக்லா. அதைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியினரை அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை தேர்வு செய்ததன் மூலம் அக்கட்சி தவறு செய்துவிட்டு என்று கருணா சுக்லா கூறியுள்ளார். அத்துடன் 2002 குஜராத் கலவரத்துக்கு காரணமான கோத்ரா ரயில் எரிப்பின் போது முதல்வராக இருந்தவர் நரேந்திரமோடிதான். அதனால் அவர் கோத்ரா சம்பவத்துக்கு தாம் பொறுப்பில்லை என்று கூறி கை கழுவ முடியாது.

பாரதிய ஜனதா கட்சியினர் என்னை பயன்படுத்திக் கொண்டனர். நான் மீண்டும் அந்த கட்சிக்கு செல்லப் போவதில்லை. அவர்களுக்கு எதிராக நிச்சயம் பிரசாரம் செய்வேன் என்றார்.

English summary
Her uncle, Atal Bihari Vajpayee, is the BJP's most iconic leader. Karuna Shukla, who quit the party late last month, however, says she has turned down requests for reconciliation, and that the BJP has erred by selecting Narendra Modi as its choice for prime minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X