For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் விதி மீறல் வழக்கில் மோடி குற்றமற்றவர்: குஜராத் காவல் துறை அறிக்கை

By Mathi
Google Oneindia Tamil News

அகமதாபாத்: லோக்சபா தேர்தலின்போது, பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றமற்றவர் என குஜராத் காவல்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

லோக்சபா தேர்தலின்போது, பாஜக மூத்த தலைவர் அத்வானி போட்டியிட்ட காந்திநகர் தொகுதியில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த மோடி, பாஜகவின் தாமரைச் சின்னத்துடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

modi

இது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சி, இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. தேர்தல் ஆணைய உத்தரவையடுத்து, மக்கள் பிரிதிநிதித்துவச் சட்டத்தின் பல்வேறு பிரிகளின் கீழ் மோடி மீது முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது.

மேலும் இது குறித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குஜராத் காவல்துறை தாக்கல் செய்த அறிக்கையில், மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறவில்லை..அவர் குற்றமற்றவர் என்று கூறியுள்ளது.

English summary
Giving a clean chit to Prime Minister Narendra Modi, the Gujarat police on Friday filed a closure report in a metropolitan court here in a case of alleged violation of model code of conduct during the Lok Sabha election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X