For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அத்வானியுடன் மோடி முக்கிய ஆலோசனை.. அமீத் ஷாவுடனும் ஆலோசனை

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமராகப் பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி இன்று டெல்லியில் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் முக்கியத் தலைவர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மூத்த தலைவர் அத்வானியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். மேலும் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கையும் அவர் சந்தித்துப் பேசினார்.

ஆட்சியமைப்பு குறித்தும், அமைச்சரவை குறித்தும் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் மோடி. நேற்று பாஜகவின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் முதல் முறையாக நடந்தது. இன்று முக்கியத் தலைவர்களுன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் மோடி.

Narendra Modi Holding Crucial Talks Today, Yeddyurappa, Others Line Up to Meet Him

குஜராத் பவனில் இன்று காலை நடந்த முதல் கூட்டத்தில் மோடியை எதியூரப்பா சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் பீகார் பாஜக தலைவர் தர்மேந்திர பிரதானையும் மோடி சந்தத்தார். மேலும் மோடியின் வலதுகரமான அமீத் ஷாவும் ஆலோசனையில் பங்கேற்றார்.

குஜராத் பவன் சந்திப்புகளுக்குப் பின்னர் ராஜ்நாத் சிங் வீட்டுக்கு மோடி சென்றார். அங்கு ராஜ்நாத்துடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து மூத்த தலைவர் அத்வானியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார் மோடி.

மேலும் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகம் செல்லும் மோடி அங்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தைச் சந்தித்துப் பேசுகிறார்.

English summary
It is a day of crucial meetings for the BJP as after its historic win, the party's focus now shifts to government formation. Yesterday, the BJP's Parliamentary Board met for the first time. Today, Prime Minister-elect Narendra Modi will meet top party leaders in the national capital, including BJP chief Rajnath Singh as he looks to finalise the names that will feature in his cabinet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X