For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விராட் கோஹ்லியின் சவாலை ஏற்று ஃபிட்னஸ் வீடியோவை வெளியிட்டார் மோடி

விராட் கோஹ்லியின் சவாலை ஏற்று ஃபிட்னஸ் வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    விராட் கோஹ்லியின் சவாலை ஏற்று ஃபிட்னஸ் வீடியோவை வெளியிட்ட மோடி-வீடியோ

    டெல்லி: விராட் கோஹ்லியின் சவாலை ஏற்று ஃபிட்னஸ் வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.

    மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு நாம் ஃபிட்டாக இருந்தால்தான் நாடு ஃபிட்டாக இருக்கும்.

    அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, விராட் கோலி, சாய்னா நேவால், ஹிர்த்திக் ரோஷன் ஆகியோரை டேக் செய்திருந்தார்.

    மோடிக்கு சவால்

    மோடிக்கு சவால்

    இதையடுத்து, ரத்தோரின் சவாலை ஏற்றுக்கொண்ட கோஹ்லி, தானும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு, அதில் தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோரை டேக் செய்தார்.

    பிட்னஸ் சவால்

    பிட்னஸ் சவால்

    அந்த டுவிட்டர் பதிவில், ‘நான் ரத்தோர் விடுத்த சவாலை ஏற்று கொண்டுள்ளேன். இப்போது என் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோருக்கு இந்த ஃபிட்னஸ் சவாலை விடுக்கின்றேன்', என கூறியிருந்தார்.

    விரைவில் வீடியோ

    இதையடுத்து விராட் கோஹ்லியின் சவாலை தாம் ஏற்றுக் கொள்வதாக கூறிய பிரதமர் மோடி விரைவில் வீடியோவை வெளியிடுவேன் என்றார். இந்நிலையில் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை மோடி இன்று வெளியிட்டார்.

    குமாரசாமிக்கு சவால்

    சுமார் 1.48 நிமிடங்கள் ஓடக் கூடிய வீடியோவை வெளியிட்ட மோடி கர்நாடக முதல்வர் குமாரசாமி, காமன்வெல்த் போட்டிகளில் அதிக மெடல்களை வென்ற மாணிக்கா பத்ரா, 40 வயதுக்கு மேற்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சவால் விடுத்துள்ளார்.

    English summary
    Narendra Modi releases fitness video in twitter after accepting fitness challenge.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X