For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடியிடம் இருக்கும் ரொக்கப் பணம் ரூ.4700 மட்டுமே.. பிரதமர் அலுவலகம் வெளியிட்ட சொத்து விவரம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திரமோடியின் கையிருப்பில் ரூ.4700 பணம் மட்டுமே இருப்பதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், ஒரு ஆண்டில், பிரதமரின் சொத்துக்கள் மதிப்பு சுமார், ரூ.15 லட்சம் வளர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளவர்களின் சொத்துக்கணக்கு வருடந்தோறும் வெளியிடப்பட்டுவருகிறது. இப்போது பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள இந்த தகவலில் இடம்பெற்றுள்ள சில சுவாரசிய தகவல்கள் இதுதான்:

Narendra Modi's cash in hand only Rs 4,700, total assets over Rs 1 crore

*பிரதமர் மோடியிடம் கையிருப்பு தொகையாக ரூ.4700 மட்டும் உள்ளது.

*பிரதமரிடம் நான்கு மோதிரங்கள் உள்ளன. அவற்றின் மொத்த எடை 45 கிராம். மதிப்பு ரூ.1.19 லட்சம்.

*மோடிக்கு சொந்தமாக, மோட்டார் வாகனங்களோ, விமானமோ, படகு, கப்பல் இல்லை.

*2015 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, பிரதமரிடமுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மதிப்பு ரூ.1 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 893.

*அதற்கு முந்தைய ஆண்டில் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 26 லட்சத்து, 12 ஆயிரத்து 288 ஆகும். சொத்துக்கள் அப்படியே இருந்தாலும்கூட, சந்தை மதிப்பு கூடியதால் அவற்றின் மதிப்பும் ரூ.15 லட்சம் அளவுக்கு கூடியுள்ளது.

*மோடியின் வங்கி கணக்குகள் குஜராத்தில்தான் உள்ளன. பிரதமரான பிறகும் டெல்லியில் கணக்கு தொடங்கவில்லை.

*ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள எல்அன்டுடி பாண்டு, ரூ.5.45 லட்சம் மதிப்புள்ள தேசிய சேமிப்பு சர்டிபிகேட்டுகள், ரூ.1.99 லட்சம் மதிப்புள்ள எல்ஐசி பாலிசி ஆகியவை அவரது சேமிப்பு சொத்துக்கள்.

English summary
Prime Minister Narendra Modi's declared assets have gone up by around Rs 15 lakh in the financial year 2014-15 to Rs 1.41 crore, from Rs 1.26 crore in the previous year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X