For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி மறுத்து இழுத்தடித்த டெல்லி விமான நிலைய அதிகாரிகள்: மோடி புகார்

By Mathi
|

பெரேலி: டெல்லி விமான நிலையத்தில் இருந்து தமது ஹெலிகாப்டர் புறப்பட உரிய நேரத்தில் அனுமதி கொடுக்காமல் பல மணி நேரம் அதிகாரிகள் காத்திருக்க வைத்ததாக பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி புகார் தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலுக்காக உத்தரப்பிரதேச மாநிலம் பெரேலியில் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொள்ள வருகை தந்தார். பிரசார மேடைக்கு மிக தாமதமாக வந்த மோடி கூறியதாவது:

Narendra Modi says he was kept waiting at Delhi airport

நீங்கள் அனைவரும் எனக்காக வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருகிறீர்கள். ஆனால் இந்த தாமதத்திற்கு நான் காரணம் அல்ல.

டெல்லி விமான நிலைய அதிகாரிகள் எனது ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி மறுத்துவிட்டனர். நான் காலை 9.30 மணியில் இருந்து ஹெலிகாப்டரில் அமர்ந்து இருந்தேன். ஆனால் ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி கொடுக்கவில்லை.

இந்த தாமதத்திற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன். ஆனால் நீங்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு நேரம் காத்திருப்பது நிச்சயம் ஒருபோதும் வீணாகாது.

இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

English summary
BJP's Prime Ministerial candidate Narendra Modi today claimed that aviation authorities at the Delhi Airport did not give prompt permission to his helicopter for taking off due to which he was late for his rally here.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X