For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2008 மும்பை தாக்குதல்.. அதை மறக்கவே மாட்டோம்.. பிரதமர் மோடி சூளுரை!

Google Oneindia Tamil News

அகமதாபாத்: 2008-ம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது என்று தெரிவித்தார்.

2008-ஆம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய ஹோட்டல்கள், ரயில் நிலையத்தில் நடத்திய தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

Narendra Modi says India will never forget the 2008 Mumbai attacks

இந்த தீவிரவாதவாத தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதி அஜ்மல் கசாப் விசாரணைக்குப் பின்னர் கோர்ட் உத்தரவுப்படி தூக்கில் இடப்பட்டான்.

இந்த நிலையில், குஜராத்தின் கெவாடியாவில் அரசியலமைப்பு தின கொண்டாட்டங்களைக் குறிக்கும் சட்டமன்ற அமைப்புகளின் தலைமை அதிகாரிகளின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய 12 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

26/11.. மறக்க முடியுமா.. சோக நினைவுகளை.. அதிரடி ஆபரேஷனை.. மும்பை தாக்குதல் நினைவு தினம் இன்று!26/11.. மறக்க முடியுமா.. சோக நினைவுகளை.. அதிரடி ஆபரேஷனை.. மும்பை தாக்குதல் நினைவு தினம் இன்று!

இந்த தாக்குதலில் பலஅப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் .பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் பலியாயினர்.2008-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கொடுத்த காயங்களை, வேதனைகளை இந்தியா ஒருபோதும் மறக்காது. இந்த தாக்குதல்களில் உயிரை இழந்த காவல்துறையினர், ராணுவ வீரர்கள் மக்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

Narendra Modi says India will never forget the 2008 Mumbai attacks

நாடு பயங்கரவாதத்தை தற்போது பல்வேறு புதிய கொள்கைகளுடன் எதிர்த்து வருகிறது. இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து இந்தியாவைப் பாதுகாக்க அரசு முயற்சித்து வருகிறது. மும்பை தாக்குதல்கள் போன்ற சதி திட்டங்களை முன்கூட்டியே கண்டறிந்து முறியடித்து வருகிறோம். நமது நாட்டை பாதுகாக்கும் பாதுகாப்புப் படையினருக்கு வீர வணக்கம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

English summary
Speaking on the 2008 Mumbai attacks, Prime Minister Narendra Modi said India would never forget the attack. He also said that we will protect the country from such attacks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X