For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2024-ஆம் ஆண்டிலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சிவனை வேண்டுகிறேன்-மோடி கிண்டல்

2024-ஆம் ஆண்டிலும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர சிவனை வேண்டுகிறேன் என்று மோடி தெரிவித்தார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: 2024-ஆம் ஆண்டிலும் காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சிகளும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என சிவனை பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம், ஆர்பிஐ, நீதித்துறை எதன் மீதும் நம்பிக்கையில்லை

ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்போது எதிர்க்கட்சிகளுக்கு வருத்தத்தை கொடுக்கின்றன. 2024ம் ஆண்டிலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சிவனை வேண்டுகிறேன்.

ஏற்க மனமில்லை

ஏற்க மனமில்லை

டோக்லாம் விவகாரத்தில் சீனாவை நம்பும் எதிர்க்கட்சிகள் இந்தியாவை நம்பவில்லை. இந்த நாடு எதிர்க்கட்சிகளை மன்னிக்காது. நமது ராணுவ வீரர்கள் பெற்ற வெற்றியை கூட எதிர்க்கட்சிகள் ஏற்க மனமில்லை.

அவமானம்

அவமானம்

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் மீதும் எதிர்க்கட்சிகள் சந்தேகம் எழுப்பினர். ராணுவ தளபதியை கூட எதிர்க்கட்சிகள் தவறாக பேசியுள்ளனர். நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் அவமானகரமாக பேசிக் கொள்ளுங்கள்.

நாடு வளர்ச்சி அடைவதில்

நாடு வளர்ச்சி அடைவதில்

இந்திய ராணுவத்தை பற்றி தவறாக பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். இந்திய ராணுவத்தை பற்றி தவறாக பேசுவதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். நாடு வளர்ச்சி அடைவதில் காங்கிரஸுக்கு நம்பிக்கையில்லை.

காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சி

நாங்கள் ஆட்சி கட்டிலில் அமர்வதை காங்கிரஸ் கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை. தேவகவுடா, முலாயம்சிங் உள்ளிட்டோரை காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தியுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு

நாட்டின் பாதுகாப்பு

பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் அதிகாரம் கீழ் மட்ட அளவிலும் ஆட்சி சென்றுள்ளது. நாட்டின் மீது பலமுறை தேவையற்ற தேர்தல்கள் திணிக்கப்பட்டுள்ளன. ரஃபேல் விமான விவகாரத்தில் வெளிப்படை தன்மையுடன் எங்கள் அரசு செயல்படுகிறது.

தெலுங்கானா

தெலுங்கானா

இரு பெரிய நாடுகளுடன் ரஃபேல் விமானத்துக்கு ஒப்பந்தம் வைத்துள்ளோம். நாட்டின் பாதுகாப்பு மீதா நாங்கள் விளையாடுவோம்? இதில் எந்த சமரசமும் இல்லை. எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறீர்கள், இனியாவது நீங்கள் திருந்த வேண்டும். ஆந்திரா, தெலுங்கானா பிரித்ததன் விளைவை நீங்கள் அறிவீர்கள் என்றார் பிரதமர் என்றார் மோடி.

English summary
Narendra Modi says that Congress may bring No Confidence Motion in the year 2024. For this i pray Lord Shiva.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X