For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வதோதரா தொகுதியில் மோடி ராஜினாமா- அமித் ஷா போட்டி?

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அங்கு நடைபெறும் இடைத் தேர்தலில் மோடியின் வலது கரம் அமித் ஷா போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.

பிரதமர் மோடி குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து லோக்சபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து வதோதரா தொகுதி எம்பி பதவியை அவர் இன்று ராஜினாமா செய்துள்ளார்.

Narendra Modi vacates Vadodara seat; Amit Shah may fill his shoes

வாரணாசி தொகுதி எம்பியாக மட்டுமே நீடிக்க அவர் முடிவு செய்துள்ளார். இதனையடுத்து வதோதராவில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தலில் மோடியின் ஆதரவாளரான அமித் ஷா போட்டியிடுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக தலைவர் பதவிக்கும் அமித் ஷா பெயர் அடிபடுவது குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Narendra Modi on Thursday tendered his resignation as the MP from Vadodara Lok Sabha constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X