For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி கின்னஸ் சாதனை... 22,374 வாக்குகளில் தவறிப்போச்சே

By Mayura Akilan
|

வதேதரா: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தான் போட்டியிட்ட வதோதரா தொகுதியில் 5,70,128 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளார். ஆனாலும் மோடி 22,374 வாக்குகளில் தேர்தல் சாதனையைத் தவறவிட்டுள்ளார்.

லோச்பா தேர்தல் சரித்திரத்தில், ராம்விலாஸ் பாஸ்வான், சிபிஎம் கட்சியின் அனில் பாசுவுக்கு அடுத்தபடியாக மோடி அதிகபட்ச வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற வேட்பாளராகத் திகழ்கிறார்.

Narendra Modi wins Vadodara seat with record 5.7 lakh votes

5 லட்சம் வாக்குகளுக்கும் மேல் பெற்று வென்ற 3வது வேட்பாளர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ராம்விலாஸ் பஸ்வான்

1989ஆம் ஆண்டு தேர்தலில் பாஸ்வான் 5,04448 வாக்குகள் பெற்ற சாதனை படைத்தார்.

அனில்பாசு

2004ஆம் ஆண்டு தேர்தலில் அவரை முறியடித்தார் சிபிஎம்-இன் அனில் பாசு. மேற்குவங்கத்தின் ஆரம்பாக் தொகுதியில் 2004ஆம் ஆண்டு தேர்தலில் 5,92,502 வாக்குகள் பெற்று அனில்பாசு வெற்றி பெற்றதே இந்திய சாதனையாக இருந்து வருகிறது.

சாதனையை தவறவிட்ட மோடி

இந்தத் தேர்தலில் நரேந்திர மோடி வதோதராவில் 5,70,128 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆனால் சாதனையை முறியடிக்கத் தவறிவிட்டார்.

ஜஸ்ட் 22 ஆயிரம் வாக்குகள்

அனில் பாசுவுக்கும் மோடிக்கும் இடையிலான வித்தியாசம் சுமார் 22,374 வாக்குகள்தான் என்று வருத்தப்படுகின்றனர் பாஜகவினர்.

English summary
BJP’s Prime Ministerial candidate Narendra Modi won ​​the Vadodara Lok Sabha constituency by a victory margin of 5,70,128 votes, probably the highest margin by any candidate in the 2014 Lok Sabha elections. Modi broke the second highest victory margin of LJP’s Ramvilas Paswan’s 5,04,448 votes in 1989.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X