For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீப்பிடிக்காது, குண்டு துளைக்காது: ஸ்கார்பியோவிலிருந்து பிஎம்டபிள்யூவுக்கு மாறுகிறார் மோடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: தீவிரவாத தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சிறப்பு அம்சங்கள் கொண்ட பிஎம்டபிள்யூ கார்களை இனிமேல் பிரதமர் நரேந்திரமோடி பயன்படுத்த உள்ளார். தனது பேவரைட் காரான ஸ்கார்பியோவுக்கு குட்பை சொல்லிவிட்டார்.விருச்சிக ராசிக்காரரான நரேந்திரமோடி, ராசியின் பெயர் கொண்ட ஸ்கார்பியோவை இதுவரை பயன்படுத்தி வந்தார். இதுதான் மோடியின் விருப்பமான காராக இருந்துவந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது முற்றிலுமாக ஸ்கார்பியோவை மட்டுமே பயன்படுத்தினார்.

பாதுகாப்பு படை அறிவுறுத்தல்

பாதுகாப்பு படை அறிவுறுத்தல்

பிரதமராக மோடி பதவியேற்றதும், பாதுகாப்பு காரணங்களுக்காக நவீன வசதி கொண்ட பிஎம்டபிள்யூ-7 வகை காரை பயன்படுத்த சிறப்பு பாதுகாப்பு படை பரிந்துரை செய்தது. அதையேற்று பிஎம்டபிள்யூ-7 வகை காரை மோடி பயன்படுத்த உள்ளார்.

மோடிக்கு, மகிந்திரா கோரிக்கை

மோடிக்கு, மகிந்திரா கோரிக்கை

இதனிடையே மோடி தனது செல்லமான ஸ்கார்பியோ கார்களையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று மகிந்திரா நிறுவனத்தின் சார்பில் அவருக்கு கடிதம் மூலம் வேண்டுகோள்விடுக்கப்பட்டது. பிரதமரே பயன்படுத்தும் கார் என்பதால் ஸ்கார்பியோவின் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று இந்திய நிறுவனமான மகிந்திரா நினைத்தது. மோடியின் விருப்பமும் ஸ்கார்பியோவாகவே இருந்தது.

பிஎம்டபிள்யூவேதான் வேணுமா?

பிஎம்டபிள்யூவேதான் வேணுமா?

ஆனால் சிறப்பு பாதுகாப்பு படையினர் இக்கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். இசெட் பிளஸ் பாதுகாப்பு வளையத்திலுள்ள மோடிக்கு சிறப்பு அம்சங்கள் கொண்ட கார் தேவை என்று பாதுகாப்பு படை தெரிவித்துவிட்டது. எனவே நவீன வகை பிஎம்டபிள்யூ-7 வகை கார்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

காற்றுகூட புகாது

காற்றுகூட புகாது

இந்த கார் அதிநவீன துப்பாக்கிகளில் இருந்துவரும் குண்டுகளையும் துளைக்க விடாது. வெப்பத்தை உணரும் சென்சார், வெடிகுண்டுகள், ஏவுகணைகளை கண்டறியும் சென்சார் ஆகியவை இந்த காரில் உள்ளன. காரை தீவைத்து கொழுத்தினாலும்கூட, அதன் எரிபொருள் டேங் வெடிக்காது, தீப்பிடிக்காது. விஷ வாயு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினாலும்கூட, கேஸ் புரூப் தொழில்நுட்பம் இருப்பதால் காருக்குள் இருப்போருக்கு பாதிப்பு ஏற்படாது.

9 கார் கான்வாய்

9 கார் கான்வாய்

இந்திய பிரதமர்களில் தீவிரவாத அச்சுறுத்தல் மிகவும் அதிகமாக உள்ளவர் நரேந்திரமோடி. அதேபோல மிகவும் சுறுசுறுப்பாகவும் உள்ளார். எனவே பாதுகாப்பு படை வீரர்களுக்கு வேலை பழு அதிகம். மோடி தனது காரில் பயணிக்கும்போது வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் கருவி பொருத்திய வாகனம் உட்பட 9 கார்கள் உடன் செல்லும்.

English summary
Narendra Modi - India's 15th Prime Minister - choosing the specially designed BMW's 7 Series as his official car.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X